Zeal study official:
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: இனியவை கூறல்
குறள் : 95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
பொருள்:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
பழமொழி :
A true friend is the best possession
உண்மையான நண்பனே உன்னதச் சொத்து
இரண்டொழுக்க பண்புகள் :
1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.
2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "
பொன்மொழி :
ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் படி அது இருப்பதை அடையாளம் காணுவதாகும். --ஜிக் ஜிக்லர்.
பொது அறிவு :
1. மிகப்பெரிய நீர் பறவை எது ?
அன்னம்.
2. பின்னோக்கி பறக்கும் பறவை எது?
ஹம்மிங் பறவை.
English words & meanings :
flea - a biting insect. noun. உண்ணி பூச்சி. பெயர்ச் சொல். flee - run away, verb ஓடிப் போதல். வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவுவதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தச் செய்யும்.
NMMS Q
0.5,. 0.55, 0.65, 0.80, ___.
a) 0.82 b) 0.9 c) 0.95 d) 1
விடை: 1
நீதிக்கதை
உருவத்தை பார்த்து பழகாதே
ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.
அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...
ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.
உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.
மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன
இன்றைய செய்திகள்
23.12.22
* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும், இதனை ஜன.2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
* காப்புக் காடுகளுக்கு அருகில் செயல்படும் குவாரிகள் மூடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தார்.
* சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
* நாகையில் இருந்து 600 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: டிச.25, 26-ல் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
* 1.11 லட்சம் சைபர் கிரைம் வழக்கில் ரூ.188 கோடி மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்.
* ஆப்கன் பல்கலை.களில் பெண்கள் படிக்க தடை: தலிபான் உத்தரவுக்கு ஐ.நா. எதிர்ப்பு.
* எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
* சென்னை பல்கலைக்கழக தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீராங்கனை ஷெரின் தங்கம் வென்றார்.
* பள்ளி அணிகளுக்கான 7-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
* இந்தியாவில் முதன்முறையாக உலக டேபிள் டென்னிஸ் போட்டி தொடரை நடத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
Today's Headlines
* On the occasion of the Pongal festival, the Tamil Nadu government has announced that Rs.1000 Pongal gift will be given to rice family card holders and this will be inaugurated by Chief Minister Stalin on January 2.
* Environment Minister Siva V Meiyanathan said that quarries operating near reserve forests will be closed.
* The consultation for Siddha, Ayurveda, Unani, and Homeopathy courses will start on 27th in Chennai.
* Depression 600 km from Nagai: Chance of heavy rain in delta districts on Dec 25, 26.
* A mutated Omicron virus that is spreading rapidly in China has been confirmed in 4 people in India. Accordingly, intensive inspection has been ordered at international airports.
* 1.11 lakh cybercrime case recovery of Rs 188 crore: Union Minister informs.
* Ban on women studying in Afghan universities: Taliban orders UN Resistance.
* Tedros Adhanom Ghebreyesus, the head of the World Health Organization, said that the unexpected increase in the spread of corona in China is worrying.
* Chennai University Athletics: Loyola College's Sherin wins gold in women's 100m.
* The 7th 20-over cricket tournament for school teams will start on 26th in Tamil Nadu.
* For the first time India has been given permission to host the World Table Tennis Tournament.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment