Skip to main content

Zeal study official: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2022

 Zeal study official:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.12.2022

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 92

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.


பொருள்:

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால் மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.


பழமொழி :

Spend as you get.

வரவுக்கேற்ற செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.

 2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "

பொன்மொழி :

மழையின் போது அனைத்து பறவைகளும் மறைவிடத்தைத் தேடுகின்றன. ஆனால் கழுகு மேகங்களுக்கு மேலே பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது. சிக்கல்கள் பொதுவானவை தான், ஆனால் அணுகுமுறை வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. --ஏ. பி. ஜே. அப்துல் கலாம்.

பொது அறிவு :

1. ஆப்பிரிக்கா காந்தி என அழைக்கப்படுபவர் யார்? 

கென்னத் கௌண்டர்.

 2. மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்? 

திப்பு சுல்தான்.

English words & meanings :

fair - just, impartial, adjective and adverb, நியாயமான, பெயரடை, வினையுறிச் சொல். fair - money for journey. noun. பயணக் கட்டணம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாப்பிட வேண்டிய சிறந்த பழங்களில் ஒன்று கொய்யா பழம். அதில் கலோரிகளும் மிக குறைவு.


ஒரு மீடியம் சைஸ் கொய்யாப் பழத்தில் வெறும் 37 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.

NMMS Q

கொடுக்கப்பட்ட நான்கு எண்களில் தொடர்பற்ற எண்: 


a) 25. b) 81. c) 196. d)256. 


விடை: 81


நீதிக்கதை


மனதில் எழும் குறை


வடுகபட்டி என்ற ஊரில் சந்தோஷம் என்ற இளைஞன் இருந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. பின் நகரத்தில் வேலையும் கிடைத்தது. தன் மனைவியுடன் நகரத்தில் தங்கி வேலை பார்த்தான். 


வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தான். எல்லோரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை! என்று குறை சொன்னாள் மனைவி. 


நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும் என்றான் அவன். அடுத்த நாள் அவன் வேலை முடித்து விட்டு வந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர் என்றாள் அவள். 


இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள், என்றாள். அச்சமையம் அவனுக்கு பெற்றோர்களிடம் இருந்து ஒரு மடல் வந்தது. அதில், ஒரு வாரம் நடக்கும் ஊர்த் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்று எழுதி இருந்தது. 


மனைவியிடம் அந்த மடலைக் காட்டி, எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை இருப்பதால் என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா! என்றான். அவளும் அவன் சொன்னதைக் கேட்டு ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள். 


பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா? என்று கேட்டான் அவன். அங்கே மாடு மேய்க்கும் வேலனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்! என்றாள் அவள். 


யாரைப் பார்த்தாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைத்துக்கொண்டு, அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் இருக்கிறது. இவளின் குணத்தை மாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தான் சந்தோஷம். 


நீதி :

எப்போதும் நல்லதையே நினைத்தல் வேண்டும்.


இன்றைய செய்திகள்

20.12.22


* கடலூர் மாவட்டத்தில் 1.28 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்: அரசாணை வெளியீடு.


* சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்தை  தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.


* வானிலை முன்னறிவிப்பு:  டிச.23-ல் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


* ரயில்களில் அனுப்பும் பார்சல்களை தபால்காரர் மூலம் விநியோகிக்கும் புதிய திட்டம்: மதுரை, கோவை கோட்டத்தில் விரைவில் அமல்.


* டெல்லியில் மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்: ஒரு லட்சம் பேர் பங்கேற்பு.


* 7,000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை சீனாவுக்கான எச்சரிக்கை.


* கடந்த 5 ஆண்டுகளில் மத்திய ஆயுதப்படைகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்ப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்.


* கரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு: தகவல்களை மூடி மறைக்கிறது சீனா.


* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி.


* நேசன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'.


* உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து.


Today's Headlines


* Ordinance issued: Joint drinking water scheme to benefit 1.28 lakh people in Cuddalore district.


*  The Tamil Nadu Chief Minister launched the 'Namma School Foundation project on behalf of the School Education Department in Chennai.


 * Weather forecast: Heavy rain likely in 6 districts of Tamil Nadu on Dec 23.


*  New scheme for delivery of parcels sent by trains by postmen: Soon to be implemented in Madurai, Coimbatore.


 * Farmers strike resumes in Delhi: One lakh people participated


 *  The Agni-5 cruise missile which attacked 7,000 km was tested and is a warning to China.


 * Over 1 Lakh Soldiers Inducted into Central Armed Forces in Last 5 Years: Union Home Ministry Information


 * Corona death toll rises: China hides information


*  The Indian team has advanced to the 2nd position in the World Test Championship rankings.


* Nations Cup Hockey: Indian Women's Team won the Championship.


 * World Cup Football: Golden Boot for Mbappe, Golden Ball for Messi

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

Comments

Post a Comment

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers