Zeal study official:
திருக்குறள் :
"பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: விருந்தோம்பல்
குறள் : 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
பொருள்:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் நற்செயலுக்கு அதனை பயன்படுத்தப்படாமல் போய் விட்டோமே என வருந்துவார்கள்."
பழமொழி :
"What the heart thicketh, the tongue speaketh.
பானையில் சோறு இருந்தா தானே அகப்பையில் வரும். "
இரண்டொழுக்க பண்புகள் :
1. "எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.
2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன்,கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்"
பொன்மொழி :
ஒவ்வொரு பிரச்சனைக்குள்ளும் அதைத் தீர்ப்பதற்கான விதைகள் உள்ளன. உங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை என்றால், உங்களுக்கு எந்த விதைகளும் கிடைக்காது. --நார்மன் வின்சென்ட் பீலே
பொது அறிவு :
1. ஜெனிடிக்ஸ்-ன் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
கிரிகோர் ஜோஹர் மெண்டல்.
2. இதயத்தை கவர்ந்துள்ள சவ்வில் காணப்படும் திரவத்தின் பெயர் என்ன?
பெரிகாட்டியல் பாய்மம்.
English words & meanings :
die - not living. verb. இறந்து போதல். வினைச் சொல். dye - color. noun. சாய வண்ணம். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய டயட்டில் மக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.
மக்னீசியம் வேர்க்கடலையில் அதிகமாக இருக்கிறது. நம்முடைய உணவில் உள்ள மற்ற கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை வேகமாக ஜீரணிக்கச் செய்து, மெட்டபாலிசத்தை அதிகரித்து ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க வேர்க்கடலை உதவி செய்யும்.
NMMS Q
கண், மூக்கு, தோல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
அ) இதயம் ஆ) காது இ) நுரையீரல் ஈ) கல்லீரல்
விடை: காது
டிசம்பர் 15
வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்
வால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
நீதிக்கதை
தங்கத்தூண்டில்
ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்.
அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான்.
அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான்.
இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான்.
பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு.
தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.
ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது.
நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.
இன்றைய செய்திகள்
15.12.22
* விதிமீறல் கட்டடங்கள்: ஈஷா அறக்கட்டளைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது ஐகோர்ட்.
* தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாகக் கூறி தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குதல், முதல்வர் கோப்பை கபடி போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
* பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடங்களை பயிற்றுவிக்க யுஜிசியின் வழிமுறையின்படி முதுநிலை பட்டதாரிகள் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டு வரப்பட உள்ளன என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
* வங்கிக் கணக்கு விவரம் இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் பட்டியல் வெளியீடு: வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக தொடங்கவும் ஏற்பாடு.
* அலோபதி மருத்துவர்கள் போல் சித்த மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* 3 ஆண்டுகளில் 1,811 என்ஜிஓ-க்களின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து - மக்களவையில் மத்திய அரசு தகவல்.
* இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக
ஜனவரி 1, 2009-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்க வாழ்நாள் தடை: நியூசிலாந்து அதிரடி சட்டம்.
* செவ்வாய் கோளில் ஏற்பட்ட தூசிப் புயல் காற்றின் ஒலியை நாசா அனுப்பிய ரோவர் விண்கலம் பதிவுச் செய்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
* புரோ கபடி லீக்கில் முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்.
* உலகக் கோப்பை கால்பந்து: 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த அர்ஜென்டினா.
* வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்ப்பு.
Today's Headlines
* Violating buildings: ICourt quashes pollution control board's notice to Isha Trust
* The Supreme Court has imposed a fine of Rs 1 lakh on the school education department of the Tamil Nadu government for trying to drag out the pension benefits of the sanitation workers through lawsuits.
* Mr. Udayanidhi Stalin, who took over as the Minister of Youth Welfare and Sports Development, on the first day he signed the files including increasing the pension for the athletes and allocating Rs. 47 crores for the Chief Minister's Cup Kabaddi Tournament.
* Post Graduates will be appointed as per UGC guidelines to teach Tamil subjects in Engineering Colleges. Higher Education Minister Ponmudi has said that Tamil subjects will be introduced in polytechnic colleges from next year as well.
* Publication of list of Ration card holders without bank account details: A fresh start arrangement for those without bank account details.
* The High Court has ordered the promotion of Siddha doctors like allopathic doctors.
* Cancellation of licenses of 1,811 NGOs receiving foreign donations in 3 years - Central Government informs Lok Sabha.
* To free the youth from the habit of smoking, Lifetime smoking is being banned for people who were born after January 1, 2009: New Zealand Gov implements Law.
* A NASA rover has recorded the sound of a dust storm on Mars. This has made NASA scientists happy.
* Tamil Thalaivas entered the semifinals for the first time in the Pro Kabaddi League.
* World Cup Football: Argentina reach the finals for the 6th time.
* Test match against Bangladesh: India scored 278 runs for the loss of 6 wickets on the first day.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment