Zeal study official:
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.12.22
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரம்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் எண்: 2
கற்றதனா லாயபயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
பொருள்: கடவுளின் புனிதமான திருவடிகளை வணங்காதவன்,
கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை.
பழமொழி :
Yourself first, others afterward.
தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமமும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன்.
2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.
பொன்மொழி :
குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.____விவேகானந்தர்
பொது அறிவு :
1. உலகின் மிகவும் நீளமான நதி எது?
நைல் நதி.
2. பகவத் கீதையில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
18 அதிகாரங்கள்.
English words & meanings :
You are jammy - you are lucky, அதிர்ஷ்டமான நபர்,
she is loaded - she is having lots of money, அதிகம் பணம் வைத்து இருப்பவர்
ஆரோக்ய வாழ்வு :
இளம் சூடான நீரில் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து அதில் கால்களை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கிவிட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி வெடிப்பு மறையும்.
கணினி யுகம் :
Ctrl + ] - Increase selected font +1.
Ctrl + [ - Decrease selected font -1
டிசம்பர் 10
மனித உரிமைகள் நாள்
ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.
1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.
நீதிக்கதை
முரசு சத்தம்
ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது.
பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது.
நீதி :
ஆசையே துன்பத்திற்குக் காரணம்
செய்திகள்
சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
Headlines
According to the Chennai Meteorological Department, the center of Cyclone Mandus, which was threatening the people of Chennai, crossed the coast at 2.30 pm.
The Union Health Minister said in the Parliament that the construction work of Madurai AIIMS will start soon.
Argentina beat the Netherlands 4-3 in a penalty shoot-out to advance to the semi-finals.
Comments
Post a Comment