Zeal study official:
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
02-12-2022
இன்றைய திருக்குறள்
குறள்எண்-221
அதிகாரம் : ஈகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
மு.வ உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
கருணாநிதி உரை:
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
பொன்மொழி
மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத்தவிர வேறொரு ஆயுதம் இல்லை.
- மகாத்மா காந்தி
பழமொழி மற்றும் விளக்கம்
A good face needs no paints
அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
Important Words
1. Bank - கரை/ வங்கி
2. Barley - வாது கோதுமை
3. Barn - தானியக் களஞ்சியம்
4. Barrel - பீப்பாய்
பொதுஅறிவு
1. இந்தியாவில் மேகம் சூழ்த மாநிலம் எது ?
மேகாலயா
2. மாலை விண்மீன் என்று அழைக்கப்படும் கிரகம் எது ?
வீனஸ் (வெள்ளி )
விடுகதை
1. கண்ணில் தென்படுவான். கையில் பிடிபட மாட்டான். அவன் யார் ?
புகை
2. வெயிலில் மலரும், காற்றில் உலரும் - அது என்ன ?
வியர்வை
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!
திணை
🌾 திணை சிறுதானிய பயிர் வகைகளில் ஒன்றாகும்.
🌾 பண்டைக் காலத்திலிருந்தே திணை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.
🌾 இந்தியாவில் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தானியமாக பயிரிடப்படுகிறது.
🌾அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராக வளர்க்கப்படுகிறது
வரலாற்றில் இன்று டிசம்பர் 2
முதலில் மின்னஞ்சல் (MAIL) என்பதைக் கண்டுபிடித்த, மின்னஞ்சலின் தந்தை, தமிழரின் பெருமைக்குரியவர் சிவா ஐயாதுரை பிறந்த தினம் இன்று (டிசம்பர் 2, 1963).
வி.ஏ.சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) டிசம்பர் 2, 1963ல் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். தனக்கு அகவை 7 இருக்கும் பொழுது தன் குடும்பத்தாருடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி என்னும் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின் பொறியியல், கணினி அறிவியல் துறைகளில் பட்டம் பெற்றார். பின்னர் படங்களுக்கு இயக்கமூட்டல் (அசைபடமாக்கல் animation) துறையில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் எ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவில் சென்று படிக்க, 2007-2008 ஆம் ஆண்டுக்கான புல்பிரைட்டு மாணவர் படிப்புதவி விருதைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு இவர் உயிரியப் பொறியியல் (biological engineering) துறையில் எம். ஐ. டி யில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார்.
வரலாற்றில் இன்று டிசம்பர்,2
உலக_கணினி எழுத்தறிவு தினம்
WORLD COMPUTER LITERACY DAY
உலக கணினி எழுத்தறிவு தினம்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி உலக கணினி எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
கணினி அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான காரியமாகி விட்டார்கள்.
உலக கணினி எழுத்தறிவு தினம் கணினி மற்றும் மின்னணு சாதனங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றது.
கணினி மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பம் பற்றி விரிவாக அறிய சிறந்த வாய்ப்பாக இந்த நாள் எடுத்துக்கொள்ளுங்கள்.
2001 ஆம் ஆண்டில் உலக கணினி எழுத்தறிவு தினத்தின் முதல் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வானது இந்திய கணினி நிறுவனமான NIIT ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
NIIT இன் 20 வது ஆண்டு நிறைவை குறிக்கும் நாள் கொண்டாட்டத்தின் தினம் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது.
இது கணினிகள் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பம் திறம்பட அணுகல் பற்றி விழிப்புணர்வு அதிகரிக்க இலக்கு கொண்ட ஒரு கொண்டாட்டம்..
எந்தவொரு வயதினரும் இந்த நுட்பங்களைப் பற்றிய அனைத்து அடிப்படை அறிவையும்,தகவல்களையும் அறிந்து கொள்வது அவசியம்.
கம்ப்யூட்டர் புரோகிராமிங் என்பது கம்ப்யூட்டர் புரோகிராம்களைப் புரிந்துகொள்வது மற்றும் கணினிகள் எப்படி வேலை செய்கிறது என்பதாகும்.இது அடிப்படை திறன் கருதப்படுகிறது.
இன்றைய உலகில் இருக்கும் டிஜிட்டல் பிளவை இன்று நாள் தடை செய்கிறது.
கம்ப்யூட்டர் புரோகிராமிங் என்பது கம்ப்யூட்டர் புரோகிராம்களையும் கணினிகளுடன் தொடர்புடைய பிற பயன்பாடுகளையும் பயன்படுத்துவதற்கான வழிமுறையாகும்.
டிஜிட்டல் எழுத்தறிவு பற்றி குழந்தைகளுக்கு கல்வி கற்பது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டரில் எழுத்தறிவு என்பது கணினிகள் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றிய ஒரு புரிதலைக் குறிக்கிறது.
கணினி பற்றி கற்றல் கருத்து அடிப்படை அறிவு அப்பால் தான். இந்த சாதனங்களில் உள்ளும் வெளியேயும் தெரிந்துகொள்வதன் மூலம் கணினியில் அறிவியலின் மிகுந்த புத்தி விரைவில் பெற முடியும்.
ஆழமான கணினிகளைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் உன்னுடைய உயர் சுயவிவரத்தை உருவாக்க சிறந்த வழி. இது மற்றவர்களை விட அறிவு மிகுதியாக வழங்குகிறது.
கணினிகளை எப்படிப் பயன்படுத்துவது மற்றும் கணினிகள் இயங்குகிறது என்பதைஅறிந்துகொள்வது,
சாத்தியக்கூறுகளின் உலகைப் பற்றித் தெரிந்து கொள்வதே.
கணினியைப் பற்றி அறிந்து கொள்வதற்கான தேவையைப் பற்றி உங்களைச் சுற்றி உள்ளவர்களை ஊக்குவித்தல் மற்றும் அறிதல்.
இன்றையகதை
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிகமான தாகத்துடனும், பசியுடனும் தவித்துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீர்ரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது
ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். வாயாடியதற்காக அவருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய். ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது
ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இப்போது நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய்.
நீதி :
கெட்டவர்கள் ஒருபோதும் இரக்கப்பட மாட்டார
இன்றைய செய்திகள்
02.12.22
மேற்கு தொடர்ச்சி மலையில் செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
* தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.
*பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குளிர்கால ராபி பருவப் பயிர்களை காப்பீடு செய்யுமாறு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
*சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
*தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் போர் விமானம் இணைப்பு: கடற்படை தளபதி ஹரி குமார் தகவல்.
*இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ ) கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது .
*3-வது ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது.
* To buy 1,000 new buses for TN Transport Corporation government issued a GO to allocate 420 crore rupees.
* In INS Vikrant Ship a war craft is joined information by Naval Marshall Hari Kumar
* The Board of Control for Cricket in India appointed a council for Cricket.
* In 3rd Hockey tournament India won its first victory by that gave a shock wave to Australia
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment