*கொரோனா வைரசின் ஒமிக்ரான் BF.7 திரிபு: மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா❓*
*🏛️💪✍️ஒமிக்ரான் BF.7 திரிபு மூலமாக சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது...............*
*😷கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து தற்போதுதான் உலக பொருளாதாரம் மீண்டுவரும் வேளையில்,................*
*😷மீண்டும் சீனாவில் இந்த புதிய திரிபு காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உலகளவில் கவனம் பெற்றுள்ளது......*
*😷அதேநேரம், இந்த புதிய வகை கொரோனா வைரசின் தாக்கத்தை எதிர்கொள்ள இதுவரை எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் போதுமா, புதிய தடுப்பூசி எதுவும் தேவையா, என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.*
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள தமிழர் கார் முத்துமணி. இவர், ஓர் உயிரி மருந்து நிறுவனத்தின் முதன்மை ஆய்வு அதிகாரியாக செயல்படுகிறார். அவரிடம் தற்போது நடைபெறும் ஆராய்ச்சி, கொரோனாவை தடுக்கும் புதிய தடுப்பு மருந்துகள் பற்றி விளக்கம் கேட்டோம்.....*
*பேட்டியிலிருந்து...சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், மீண்டும் மக்கள் அங்கு இறந்துபோவதாகவும் செய்திகள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா மீண்டும் அங்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ஏன்?*
*கொரோனா முதல் அலையில் சீனாவில் அதிக பாதிப்புகள் இருந்தன. அதன் பின்னர், பிற நாடுகளுக்கு பரவியது. அங்கு கொரோனா கட்டுக்குள் வந்தபோது, பிற நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி வந்ததும், பல்வேறு நாடுகளிலும், தடுப்பூசி பயன்பாடு அதிகரித்தது. அதனால், இரண்டாம் அலைக்கு பின்னர், கொரோனாவின் தாக்கம் பெரும்பாலும் உலகளவில் கட்டுக்குள் இருந்தது. பல நாடுகளில் தடுப்பூசி முகாம் பெரியளவில் நடைபெற்றது. ஆனால் சீனாவை பொறுத்தவரை, பிற நாடுகளில் கண்டறியப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பயன்படுத்தவில்லை. அங்கு, அவர்களாகவே ஒரு தடுப்பூசியை அறிமுகம் செய்தார்கள், இருந்தபோதும், பிற நாடுகளைப் போல, தடுப்பூசி முகாம்கள் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியாக இருந்தது.*
*தற்போது புதிய கொரோனா திரிபு அங்கு வந்துள்ளதோடு, இறப்புகளும் அதிகரித்துள்ளன. அந்த நாட்டில் இருந்து பலரும் பல நாடுகளுக்கு சென்றிருப்பார்கள் என்பதால், உலகளவில் மீண்டும் இந்த கொரோனா தாக்கம் கவனம் பெற்றுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள புதிய வகை கொரோனா வைரஸை சமாளிக்க இதுவரை எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் போதுமானதாக இருக்குமா? மீண்டும் நான்காவது முறையாக கொரோனா தடுப்பூசி தேவையா? நான்காவது தடுப்பூசி தேவையா இல்லையா என்று தற்போது உறுதியாக நாம் சொல்லமுடியாது*
*நான்காவது முறையாக நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், புதிய வகை கொரோனவால் பாதிப்பு ஏற்பாடாது என்று எந்த உறுதியும் சொல்லமுடியாது. தடுப்பூசி போடுவதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். ஆனால் அதனால் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று உறுதியாக சொல்லமுடியாது. கொரோனா வைரஸை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் திரிபுகள் உருவாவதை தடுக்கமுடியாதா? வைரஸ் என்பது தன்னை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற உறுதியோடு பரவும் என்பதால், முதலில் நம்மை நாம் தற்காத்துகொள்வதுதான் சிறந்த வாய்ப்பாக இருக்கும். எளிமையாக புரிந்துகொள்வதற்கான உங்களுக்கு விளக்குகிறேன். ஒரு சிக்கலான பாதையில் நீங்கள் பயணிக்கும்போது, வளைந்து நெளிந்து செல்வீர்கள், உங்கள் இலக்கை அடைய முயற்சிப்பீர்கள், கடினமான பாதையாக அது இருந்தால், முயற்சி செய்வீர்கள் தானே, அதுபோலதான் இந்த கொரோனா வைரஸ் தனது இருப்பை உறுதி செய்துகொள்ள, அதனுடைய தன்மையை மாற்றிக்கொண்டு வாழ முயற்சிக்கும். அதனால்தான் மியுடேஷன்ஸ் (மரபணுப் பிறழ்வு) நடக்கிறது. புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகள் அவ்வப்போது உருவாவதை தடுக்கமுடியாது. கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்த அதே தன்மையில் தற்போது இல்லை. பலவகையில் அது மாறிவிட்டது. இதுவரை சுமார் 10 முதல் 15 வகையான திரிபுகளாக தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளது. அறிவியல்பூர்வமாக சொல்வதென்றால், ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ என்ற இரண்டு வகையாக வைரஸ் உள்ளது. கொரோனா வைரஸ் ஓர் ஆர்.என்.ஏ வைரஸ், இது தனது உருமாற்றிக்கொண்டே இருக்கும். இதனை கட்டுப்படுத்துவது சிரமம்தான். எடுத்துக்காட்டாக, எச்.ஐ.வி என்பது ஓர் ஆர்.என்.ஏ வைரஸ், இதுவரை எச்.ஐ.வி வைரஸில் சுமார் 400கும் அதிகமான திரிபுகள் வந்துவிட்டன. ஒரு சில வகையான எச்.ஐ.வி வைரஸ் மேற்கத்திய நாடுகளில் மட்டும் காணப்படுகிறது, ஒரு சில வகை ஆசிய நாடுகளில் காணப்படுகிறது*
*அதாவது, எச்.ஐ.வி வைரஸ் ஒவ்வொரு பகுதியில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்து எவ்வாறு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளமுடியுமோ அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு வாழ்கிறது. அதே போன்ற நிலைதான் தற்போது கொரோனா வைரசிலும் காணப்படுகிறது. பட மூலாதாரம், Getty Imagesகொரோனாவில் புதிய வகை திரிபு பரவி வருகிறது. இதற்கு தடுப்பூசி கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடங்கிவிட்டனவா? கொரோனா வைரஸ் முதல் அலையில் இருந்தபோது, அதனை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை எதிர்ப்பதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்டது. ஒரு வைரஸின் பேட்டர்ன்-ஐ (மாதிரி) கண்டறிவதற்குதான் அதிக காலம் தேவைப்படும். அதன் திரிபு வகையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு திரிபுக்கும் தடுப்பூசி என்பது அறிவியல் உலகில் தேவையற்றது என்று கருதப்படும். ஏனெனில், நீங்கள் தடுப்பு மருந்து கண்டறிவதற்கு ஒரு சில தினங்கள்தான் ஆகும். ஆனால் அதனை முதலில், விலங்குகளிடம் சோதனை செய்யவேண்டும், பின்னர் மனிதர்களிடம் சோதனை செய்யவேண்டும். அதற்கான காலம் அதிகம் தேவைப்படும். அதற்குள் மீண்டும் வேறு திரிபு வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதால், பொதுவாக திரிபுகளுக்கு தடுப்பூசி கொண்டுவருவது என்பது வரவேற்பை பெறுவதில்லை. ஆனால், தற்போது, உலகளவில் பல்வேறு தடுப்பூசி ஆய்வு நிறுவனங்கள் பேன் கொரோனா (PAN CORONA ) என்ற பல்வேறு விதமான கொரோனா திரிபுகளுக்கும் சேர்ந்த வகையில் ஒரு தடுப்பூசியை கண்டறியும் சோதனைகள் நடத்தி வருகின்றன. பல்வேறு நாடுகளிலும் தற்போது இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் என்பது, டெங்கு, சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை போல, நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டிய நோய்களின் பட்டியலில் வந்துவிட்டது. தடுப்பு மருந்து வரும்வரை தற்காப்பு என்பதுதான் ஒரே வழி.புதிய வகை கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வது எப்படி? தடுப்பூசிகள் மூலம் நம்மை தற்காத்துக்கொள்வது என்பது தற்போது இரண்டாவது வாய்ப்பாகதான் நாம் கருதவேண்டும். முதல் வாய்ப்பு என்பது நம்மை நாம் தற்காத்துக்கொள்வதுதான் சிறந்தது. கொரோனா வைரஸ் என்பது ஆர்.என்.ஏ வைரஸ், அதாவது விரைவாக தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. தடுப்பூசி கண்டறிந்து, அதனை நாம் போட்டுக்கொள்வதற்கு ஒரு காலம் தேவைப்படும். ஆனால் அந்த காலத்தை விட குறுகிய காலத்தில் கொரோனா வைரஸ் தனது அடுத்த திரிபு நிலைக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், தடுப்பூசியை மட்டுமே வாய்ப்பாக நாம் கருதுவதைவிட, நம்மை தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதை முதன்மையாகக் கருதவேண்டும்.அரசாங்கம் அறிவிப்பு கொடுக்கும்வரை காத்திருக்காமல், நாமாகவே கூட்டநெரிசலான இடங்களை தவிர்க்கலாம். முகக்கவசம் அணிவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளலாம். நாம் இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது. பயத்தை விடுத்து, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தலாம்.*
Comments
Post a Comment