ஆதார் எண்ணை எவ்வாறு மின் இணைப்புடன் இணைப்பது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Aadhaar number- மின் இணைப்புடன் இணைப்பதற்கு முன்பு தங்களது ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
Aadhar card-ல் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் 300 KB என்ற அளவிற்கு அதனை தயாராக வைத்திருக்கவேண்டும்.
அடுத்ததாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in என்ற இணையதளம் அல்லது https://adhar:tnebltd.org/adharupload/ என்ற இணையதள முகவரிக்கோ சென்று ஆதாரை இணைக்கும் பணியை தொடங்கலாம்.
முதல் செயல்முறைகள்:
முதலில் மின் இணைப்பு எண், அதன் பின்பு செல்போன் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும். இதன்பின்பு செல் போன் எண்ணுக்கு OTP NUMBER வரும். தங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்களை பதிவிட வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப் படும். இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாட கைதாரரின் ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்படும். சரியான தகவல்களை கொடுத்து, ஆதார் எண்களை இடைவெளி இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண்ணில்இருக்கும் பெயரை பதிவிட வேண்டும்.இதன் பின்பு தயாராக வைத்திருக்கும் 300 KB அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்னர், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து SUBMIT செய்ய வேண்டும். இதன்பிறகு உங்களது ஆதார் எண் சமர்ப் பிக்கப்பட்டது. விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படும் என்ற பதில் வரும். இத்தோடு ஆதாரை இணைக்கும் பணி முடிவடையும்.
வாடகை வீட்டில் குடியிருப்போர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் எளிதாக ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment