மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை கிண்டியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (Central Footwear Training Institute) வேலைவாய்ப்புகளை அளிக்கும் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
காலணிகள் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 22 பில்லியன் ஜோடி காலணிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது உலக உற்பத்தியில் சுமார் 11 சதவீதமாகும். நாடெங்கும் 35 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகிறது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் 50 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முதல் 10 தொழிற்துறைகளில் காலணி உற்பத்தித்துறை எப்போதும் இடம் பிடித்துவருகிறது.
காலணி உற்பத்தித் துறையில் ஈடுபடுவதற்கு முன்பு மக்கள் தயக்கம் காட்டிய நிலை மாறி இப்போது அனைத்து தரப்பினரும் இந்த துறையில் ஆர்வம் காட்டிவருவதற்கு காரணம், இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் சிறு தொழிலில் ஈடுபடுவதற்கு கிடைக்கும் வாய்ப்புகளும் ஆகும்.
மத்திய காலணி பயிற்சி நிறுவனம் நாட்டில் உள்ள காலணி உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரியத் தேவையான மனித வளங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏழு நீண்டகால பயிற்சி வகுப்புகளும், எட்டு குறுகிய கால பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியை முடிக்கும் முன்னரே மாணவர்களுக்கு பிரபல நிறுவனங்களிடம் இருந்து வேலை வாய்ப்புகளும் வந்துவிடுகின்றன.
இங்கு வழங்கப்படும் படிப்புகள்:
DFMD - Diploma in Footwear Manufacturing and design - காலணி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பட்டயப் படிப்பு, லண்டனில் உள்ள லீசெஸ்டர் கல்லூரியால் அங்கீகரிக்கப்பட்டு, அக்கல்லூரியால் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
PGDFT - PG Diploma in Footwear Technology - காலணி தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முதுநிலை பட்டயம்
PDFT - Post diploma in Footwear Technology - காலணி தயாரிப்பு தொழில்நுட்பத்தில் பட்டயத்திற்கு பிறகு படிப்பு
FDPD - Advanced certificate in Footwear Design and Product development - காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் நவீன சான்றிதழ் படிப்பு
FMT - Advanced certificate course in Footwear Manufacturing Technology - காலணி தயாரிப்பு தொழில்நுட்பத்தில் நவீன சான்றிதழ் படிப்பு
LGM - Leather Goods Maker - தோல் பொருள் தயாரிப்பில் படிப்பு
CFDP - காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் சான்றிதழ் படிப்பு
பயிற்சிக்கட்டணத்திற்கு வங்கிக்கடன் வசதியும் உள்ளது.
மத்திய காலணி பயிற்சி மையத்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலமாக உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தப் பயிற்சி மையத்தில் படித்த அனைத்து மாணவர்களும் வி.கே.சி, டாடா இண்டர்நேஷனல், பாட்டா, பூமா போன்ற பிரபல காலணி தயாரிப்பு நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். சீனா, இத்தாலி, பிரிட்டன், மலேசியா மற்றும் அரபு நாடுகளின் காலணி தயாரிப்பு நிறுவனங்களில் இங்கு படித்த மாணவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பயிற்சி முடிந்தவுடன் ரூ 15000 முதல் 18000 வரை மாதச்சம்பளத்தில் வேலைக்குச் சேரும் மாணவர்கள், ஓரிரு மாதங்களிலேயே ரூ 50000 முதல் ரூ 80000 வரை சம்பள உயர்வு பெறும் வகையில் மிகவும் திறமையானவர்களாக மாறுகின்றனர்.
புதிதாக காலணி உற்பத்தி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
குறுகிய கால பயிற்சி வகுப்புகளை அதிக மாணவர்கள் பங்கேற்றால் அவர்கள் மாவட்டங்களிலேயே சென்று நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 100 சதவீத கல்விக்கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த மையத்தில் சேர்ந்து படிப்பதற்கான தகுதி, விண்ணப்பம், இடஒதுக்கீடு, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களை http://www.cftichennai.in
என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
படித்து முடித்த உடன் வேலை வாய்ப்பு வழங்கும் காலணி உற்பத்தி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெற வேண்டும்.
Comments
Post a Comment