தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவி இருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.
6 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1.000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்,
தமிழர் நாகரீகம், பண்பாடு, தொன்மை, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொல்லியல் மற்றும் வரலாறு பாடங்களில் ஆர்வமும், விருப்பமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment