Zeal study official:
திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: வான் சிறப்பு
குறள் : 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
பழமொழி :
Drawn wells have sweetest water.
இறைத்த கிணறு ஊறும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன்.
2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.
பொன்மொழி :
எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம்! அவன் ஆயுதம் ஏந்திவிட்டால், ஆயுதம் என்பதே விமர்சனம்! - கார்ல் மார்க்ஸ்
பொது அறிவு :
1. லிஃப்ட் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ஒடிஸ்.
2. நெப்ரான்கள் என்றால் என்ன ?
சிறுநீரகக் குழல்கள்.
English words & meanings :
geo-po-nics - the science of agriculture. Noun. Geoponics gives us clear account on agriculture. வேளாண்மை அறிவியல். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொத்தரவரங்காய் இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது LDL அல்லது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருதய பிரச்சினைகள் வரமால் பாதுகாக்கின்றன.
NMMS Q :
விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 1, 4, 9, 16, 25, _____.
விடை: 36. விளக்கம்: 1 - ன் வர்க்கம் 1; 2 - ன் வர்க்கம் 4;. 3- ன் வர்க்கம் - 9; 4- ன் வர்க்கம் - 16; 5- ன் வர்க்கம் - 25; 6- ன் வர்க்கம் - 36;
அக்டோபர் 18
சார்ல்ஸ் பாபேஜ் அவர்களின் நினைவுநாள்
சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, டிசம்பர் 26, 1791 - அக்டோபர் 18, 1871) பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். [1]கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.[2] 1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931 . ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
நீதிக்கதை
கழியை விட்டதால் இறந்த ஆமை
ஓர் அழகிய குளம் ஒன்றில் இரண்டு அன்னப் பறவைகள் வாழ்ந்து வந்தன. ஒன்றின் பெயர் விகடம். மற்றொன்றின் பெயர் சங்கடம். அதே குளத்தில் கம்புக்கிரீவன் என்ற ஆமையும் வாழ்ந்து வந்தது.
விகடம், சங்கடம், கம்புக்கிரீவன் ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள். காலப்போக்கில் மழைப்பொழிவு குறைந்ததால், குளத்தின் நீரளவு குறையத் தொடங்கியது.
இதனைக் கவனித்த அன்னப் பறவைகள், இனியும் இந்தக் குளத்தை நம்பி வாழ்வது பயனற்றது. இனி நாம் வேறொரு குளத்திற்குச் செல்வோம் என்று முடிவு செய்தன. தங்களின் இந்த முடிவைத் தங்கள் நண்பனான ஆமையிடமும் கூறின.
நண்பர்களே! நீங்கள் பறந்துசென்று வேறு ஒரு குளத்தினை அடைந்துவிடுவீர்கள். நான் எப்படி வேறு குளத்திற்குச் செல்வது? எனக்கும் ஏதாவது வழி சொல்லுங்களேன்! என்றது ஆமை.
அன்னப் பறவை விகடன், ஆமையிடம் நண்பா! நாங்கள் ஒரு நீண்ட கழியினைக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு முனைப் பகுதியை நானும் மற்றொரு முனைப் பகுதியை சங்கடகனும் வாயால் கவ்விப் பிடித்துக் கொள்வோம். நீ அந்தக் கழியின் நடுப்பகுதியில் உன் வாயால் கவ்விக் கொள்ள வேண்டும். நாங்கள் இருவரும் கழியால் உன்னைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்று வேறு ஒரு குளத்தினை அடைவோம் என்று தங்கள் திட்டத்தினைக் கூறியது.
நண்பா! இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பறந்து செல்லும் போது நீ எதுவும் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நீ கீழே விழுந்துவிடுவாய். பிறகு உன்னை எங்களால் காப்பாற்ற முடியாது என்று சங்கடகன் கூறியது.
நண்பர்களே! கவலை வேண்டாம். நான் பேசவே மாட்டேன் என்று உறுதியளித்தது ஆமை.
விகடன் கூறியது போலவே கழியில் ஆமையைத் தூக்கிக் கொண்டு அன்னப் பறவைகள் பறக்கத் தொடங்கின.
ஓர் ஊரின் வழியாகப் பறந்து செல்லும் போது, ஊர் மக்கள் இந்த அதிசயமான காட்சியைப் பார்த்து வியந்தனர். அவர்கள் கூவி ஒலியெழுப்பினர். எங்கிருந்து இந்த சப்தம் வருகின்றது? என்று நினைத்த ஆமை, அன்னப் பறவைகளிடம் கேட்க நினைத்துத் தன் வாயைத் திறந்தது. உடனே, ஆமையின் பிடி கழியிலிருந்து நழுவியது. ஆமை கீழே விழுந்து இறந்தது.
நீதி :
நமக்கு நன்மை செய்கின்றவர்களின் பேச்சை நாம் மதிக்கவேண்டும் என்று பெண் பறவை, ஆண் பறவைக்குக் கூறியது.
இன்றைய செய்திகள்
18.10.22
* மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு: அக்டோபர் 19-ம் தேதி தொடங்குகிறது.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கைகள் இன்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
* சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கடந்த 6 மாதங்களில் ரூ.23 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
* தீபாவளி பண்டிகையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
* மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 200 கி.மீ தூர இலக்கை தாக்கும் மின்காந்த பீரங்கிகள் சோதனை வெற்றி.
* ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு விதிக்கப்படுள்ளது.
* சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வதுதேசிய மாநாடு தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் 3-வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
* தேசிய அளவிலான சிலம்பப் போட்டி; 24 தங்கம் வென்று கோவை வீரர்கள் சாதனை.
* உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது இந்திய ஆடவர் அணி.
Today's Headlines
* Online Counseling for Medical Courses: Starts on 19th October.
* Arumugasamy Commission report, and Aruna Jagatheesan Commission report will be presented in the Assembly today, Assembly Speaker Appavu said.
* A fine of Rs 23 crore has been collected in the last 6 months in cases registered for traffic violations in Chennai.
* On the occasion of the Diwali festival, the Public Health Department has ordered to keep burn treatment units and medicines ready in all places from government primary health centers to medical college hospitals across Tamil Nadu.
* 200 km range electromagnetic cannon developed at Ordnance Research and Development Institute, Pune, Maharashtra has been successfully tested.
* A curfew has been imposed to control the spread of the Ebola virus in the African country of Uganda.
*The 20th National Congress of the Communist Party of China began yesterday in Beijing. the current president Xi Jinping is going to be elected as the president for the 3rd term.
* National Level Cymbal Competition; Coimbatore players won 24 gold medals.
* World Shooting Championship: Indian men's team wins gold.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment