Zeal study official:
திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: இரவச்சம்
குறள் : 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
பொருள்:
இல்லாமையால் வரும் துன்பத்தை பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
பழமொழி :
Good deeds are never lost.
இட்டுக் கெட்டார் யாருமே இல்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும்.
2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.
பொன்மொழி :
வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது! நாம்தான் நடந்து நடந்து பாதை போடவேண்டும் - டிஸ்ரேலி
பொது அறிவு :
1.வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?
நண்டு.
2. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது?
டால்பின்.
English words & meanings :
lin·guis·tics - the scientific study about language. Noun. Linguisticians are experts in language. மொழியியலாளர். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்
NMMS Q 59:
Daughter : Mother :: Son : ? a) Mother. b) Father. c) Sister. d) Brother.
Answer : Father
நீதிக்கதை
பெண்ணுக்கு பெருமை கிடைத்தது எப்படி?
சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்கு தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன். அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், என்னப்பா விஷயம்..? என்று கேட்டார். சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன் - மனைவி இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்தவள் என்கிறார்கள். அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்? என்று கேட்டான் அந்த இளைஞன்.
இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார். அவனும் அதை எடுத்து வந்தான். எப்படியும் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்த கல். சுவாமி! இந்த கல்லை நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு விவேகானந்தர், அந்த கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும் என்றார்.
அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பதுபோல் அந்த கல்லை கட்டிக்கொண்டான். சிறிதுநேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோபோல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் இருக்க முடியவில்லை. 2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது. வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான். சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லை கட்டிக்கொண்டு இருக்க முடியாது என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.
அப்போது விவேகானந்தர் சொன்னார். உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம்கூட சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாளே! அதற்காக அவள் உன்னைபோல் அலுத்துக்கொள்ளவில்லையே! அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம் என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.
இன்றைய செய்திகள்
14.09.22
* சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் கழிவு மேலாண்மை தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
* தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமாக திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* பொறியியல் பாடத்திட்டங்களை தொடர்ந்து தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
* அதிவிரைவு ரயில்கள் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும்.
* ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் பார்போரா - கேத்ரினா இணை சாம்பியன் பட்டம் வென்றது.
* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி - தொடரையும் கைப்பற்றியது.
Today's Headlines
* Chennai Climate Change Action Plan draft report released. It has been informed that the public can express their views in this regard.
* The Tamil Nadu Pollution Control Board has issued action orders regarding waste management in residential areas above 20,000 square meters.
* Nanjarayan Pond in Tirupur has been declared as the 17th bird sanctuary of Tamil Nadu.
*Higher Education Minister Ponmudi has said that following the engineering curricula, the curricula of arts and science colleges in Tamil Nadu will be changed soon.
*If the high speed trains are delayed by more than 2 hours, the passengers will be given free food.
*It has been reported that Britain has not invited three countries - Russia, Belarus and Myanmar - to Queen Elizabeth II's funeral.
* Barbora - Katrina Co-Champion in US Open Women's Doubles
* England won the last Test against South Africa - also clinched the series.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment