Zeal study official:
திருக்குறள் :
பால்: பொருட்பால்
அதிகாரம்:சான்றாண்மை
குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
விளக்கம்:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
பழமொழி :
Double charge will break even a cannon
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய்
2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்
பொன்மொழி :
ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்...திருமதி. திலகவதி IPS
பொது அறிவு :
1.உலகிலேயே மிக நீளமான சுவர் எது?
சீனப்பெருஞ்சுவர் .
2.உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் எது?
சகாரா.
English words & meanings :
Xanthic - represents yellowish color adjective. மஞ்சள் நிறம் சார்ந்த அல்லது குறிக்கும் சொல்
ஆரோக்ய வாழ்வு :
சோயா துண்டுகளில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.
NMMS Q 26:
தாவர உலகின் மிகச் சிறிய விதை எது?
விடை : ஆர்க்கிட்
ஜூலை 18
நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவரரானார்
. அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.
நீதிக்கதை
தைரியம்
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.
திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.
ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.
இன்றைய செய்திகள்
18.07.22
* மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்று முதல் ஒரு வருடத்துக்கு சென்னையில் நடைபெறுகிறது.
* தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு இன்று சென்னையில் கண்காட்சி, மணற்சிற்பம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
* அரியலூர் விதைத் திருவிழா: மரபுவகை விதைகள், கைவினைப் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம்.
* கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை பராமரித்து, பாதுகாக்கும் பணியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
* இந்த ஆண்டு முதல், தொலைத்தொடர்பு சட்ட சேவை (Tele-Law service), மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
* ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
* ஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
* பாராசின் ஒபன் செஸ்: தொடரை வென்று அசத்தினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
* உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீசங்கர் நீளம் தாண்டுதலிலும், அவினாஷ் சாப்லே 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்திலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
* சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.
Today's Headlines
🌸To improve Motorless transport a awareness programme is held. Starting today it will be conducted for one year.
🌸With regards to Tamil Nadu Day function today exhibitions, sand art, discussions will be held - announcement by TN government.
🌸Ariyalur Seed festival : people shows great interest in buying hereditary seeds and handicrafts.
🌸To preserve and protect the palm leaf manuscripts of Temples Tamil Nadu Government's Hindu Religious and Charitable Endowment Board is seriously taking action.
🌸From this year onwards Tele - law service will be given to the people free of charge says Central Minister for Law and Justice Mr. Kiran Rijuju informed.
🌸 The bann is lifted through voice vote to do the amendment in law at American Parliament for India To get S-400 missiles from Russia.
🌸 Russia closed the pipe line which brings gas fuel to Germany. Due to this Germany is facing problems in getting Natural fuel gas and other resources.
🌸 India's Pragnantha won the series in open chess tournament.
🌸 In Singapore open badminton P. V. Sindhu won the Championship Award.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment