Skip to main content

Zeal study official: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.07.2022

 Zeal study official:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.07.2022


   திருக்குறள் :


பால்:      பொருட்பால்


இயல்:     குடியியல்


அதிகாரம்: சான்றாண்மை


குறள் :     984 



 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு 



 பொருள் 



 பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.



பழமொழி :


what is done is done.

கறந்த பால் மடி புகாது. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.


2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்


பொன்மொழி :


உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும்


திருப்தியுடன் செய்யுங்கள்.


அதுவே உங்கள் வாழ்வை


அர்த்தம் உள்ளதாக மாற்றும்.


- புத்தர்


பொது அறிவு :


1.மனிதனின் இதயம் ஒரு நாளில் எத்தனை முறை சுருங்கி விரிகிறது?


 ஒரு லட்சம் முறை. 


2. மனித உடலில் உள்ள நீளமான சுரப்பி எது? 


பித்த நீர் சுரப்பி


English words & meanings :


unilateral - one person's decision without others consent or agreement. Adjective. மற்றவர்களது ஒத்திசைவு இன்றி ஒருவரால் எடுக்க பட்ட முடிவு. பெயரளபடை 


NMMS Q 23: 


தந்தையின் வயது மற்றும் அவருடைய மகளின் வயது வித்தியாசம் 32. தந்தையின் வயது அவருடைய மகளின் வயதின் மூன்று மடங்கு எனில், தந்தையின் வயது



: விடை : 48

நீதிக்கதை


குருடரின் விளக்கு



ஒரு கிராமத்தில் கண் பார்வையற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் இரவு வேளையில் எப்போது வெளியே சென்றாலும் கையில் ஒரு விளக்கை எடுத்து செல்வது வழக்கம். இவர் அவ்வாறு ஒருமுறை வெளியே கையில் விளக்கோடு சென்றபோது, அவ்வழியாக வந்த வாலிபர்கள் சிலர் முதியவரை பார்த்தனர்.



முதியவரின் அருகே வந்த அவர்கள் மரியாதையின்றி, உனக்குத்தான் கண் தெரியாதே, பின் எதற்காக கையில் விளக்கை எடுத்து செல்கிறாய் என கேலி செய்து சிரித்தனர்.



வாலிபர்களின் கேள்விக்கு நிதானமாக பதில் அளித்த அந்த முதியவர். எனக்கு கண் தெரியாது என்பது உண்மை தான். ஆனால், இந்த விளக்கை நான் எனக்காக கொண்டு வரவில்லை. உங்களைபோல கண் நன்றாக தெரிந்தவர்கள் என் மீது மோதாமல் இருக்கத்தான் இந்த விளக்கு என்றார். முதியவரின் பதிலை கேட்ட வாலிபர்கள் தங்களது முட்டாள்தனமான செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.



இன்றைய செய்திகள்


13.07.22



இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான 'நீட்' தேர்வு வரும் 17ம் தேதி  நடக்கவுள்ள நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல், கொடைக்கானல் வனப்பகுதிகளில் மொத்தம் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் அந்நிய மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.



தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எப். அமைப்பு தனது சந்தாதாரர்களில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சம் பேருக்கும் ஒரே நாளில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.



ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) விண்வெளியில் பதிவு செய்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.



அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உலகின் மிகப் பழமையான மரங்கள் எரிந்து வருகின்றன.



இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.  இதற்கான டிக்கெட் விற்பனை இணைய தளம் மூலம் தொடங்கியுள்ளது.



உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜூன் தங்கப்பதக்கம் வென்றார்.



உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில்  


அரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, 94 வயதில் 1 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று, உலகிற்கே ஒரு உத்வேகம் அளித்துள்ளார்.


Today's Headlines



The hall ticket for the NEET examination has been published on the website . The examination for admission to MBBS and BDS courses is going to be held on 17th.



 A total of 16 thousand hectares of exotic trees have been found in Dindigul and Kodaikanal forests under Dindigul district.  The work of removing these will start soon.



 Chennai Meteorological Department has informed that there is a possibility of rain in 5 districts of Tamil Nadu today.



 Labour Provident Fund P.F.  The organization has intensified measures to provide same-day pension to 73 lakh pensioners among its subscribers.



 NASA has released a photograph taken in space by the James Webb Space Telescope.


 A forest fire in Yosemite National Park in California, USA, is burning some of the world's oldest trees.



 For the first time in the history of India, the 44th Chess Olympiad will be held in Mamallapuram in Tamil Nadu.  Ticket sales for this have started through the website.



 India's Arjun won tbe gold medal in World Cup shooting



 World Masters Athletics Tournament


 Bhagwani Devi from Haryana has become an inspiration to the world by winning 1 gold and 2 bronze medals at the age of 94.


 


 Prepared by



Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers