Zeal study official:
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.07.2022
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்:சான்றாண்மை
குறள் : 980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பொருள்
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
பழமொழி :
Quality is more important than quantity
அளவைவிட தரமே அதிமுக்கியம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.
2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.
பொன்மொழி :
உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,
எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
- புத்தர்
பொது அறிவு :
1.உலகில் முதல் முதலில் பெண் வீராங்கனைகளைக் கொண்டு படை உருவாக்கிய நாடு எது ?
நியூசிலாந்து .
2.காலரா தடுப்பு மருந்து யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ராபர்ட் கோச்.
English words & meanings :
Rustle - to make a sound like dry leaves or paper moving. Verb. காய்ந்த இலைகள் ஒன்றொடொன்று உரசி ஒலி எழுப்புவது. வினைச் சொல்.
ஆரோக்ய வாழ்வு :
மஞ்சளில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களுள் தலையாய ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது; மேலும் இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
NMMS Q 19
ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒரு மாணவரின் தரம் மேலிருந்து 12ஆம் இடத்திலும், கீழிருந்து 23 ஆவது இடத்திலும் இருந்தால் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை :
விடை : 34
நீதிக்கதை
குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்
ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டில் ஒரு அப்பத்தை எடுத்தது. அந்த அப்பத்தை இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. பின் யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.
அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசில் அப்பத்தை இரண்டாக வெட்டி ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்திப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத்விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்துவிட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.
அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இதுவரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது. ஒற்றுமையற்ற பூனைகள் ஏமாந்து கவலையுடன் திரும்பிச் சென்றன.
நீதி :
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பல நஷ்டங்களை தவிர்க்கலாம்.
இன்றைய செய்திகள்
07.07.22
2022-ல் தமிழகத்தில் 10,000 ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய தகவல்.
ரூ.10,000 செலுத்தக் கோரும் மத்திய நிலத்தடி நீர் ஆணைய அறிவிப்பு, தமிழகத்துக்குப் பொருந்தாது: தமிழக அரசு.
தமிழகத்தில் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் தொல்லியல் தடயங்கள் காணப்படுவதால் பாலாற்றங்கரையோரம் அகழாய்வு பணி: பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தது தொல்லியல் துறை.
உலகின் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையான 'ரிம்பாக் ஒத்திகை'யில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் சாத்புரா போர்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் ஹவாய்த் தீவிற்கு சென்றுள்ளன.
இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், நூரி அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சாதனையை முறியடித்து இந்திய பெண்கள் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
Today's Headlines
10,000 teachers will be selected in Tamil Nadu in 2022: A new information byTeacher Recruitment Board
Central Ground Water Commission announcement of demanding Rs 10,000 payment is not applicable to Tamil Nadu: Tamil Nadu Govt.
The Chennai Meteorological Department has informed that there is a possibility of very heavy rain in Nilgiris and Coimbatore.
Excavation work is underway along the banks of the paalaaru due to archaeological traces found in the Vadakkupattu village of Kancheepuram District. Department of Archeology has declared it as a protected area.
India's warship INS Satpura and P-8I LRMRASW aircraft have arrived in Hawaii to participate in the world's largest naval exercise 'Rimbag Exercise'.
Severe drought continues in Italy due to extreme heat. Following this, a state of emergency has been declared in 5 provinces.
Wimbledon Tennis - Djokovic, Nouri advance to semi-finals.
The Indian women's team broke the record of the Australian women's team and set a new record.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Hi
ReplyDelete