Zeal study official:
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: மானம்
குறள் : 968
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
பொருள்:
சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்
பழமொழி :
Clouds that the sun builds up darken him.
வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினை ஆனது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.
2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.
பொன்மொழி :
கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை!
பொது அறிவு :
1.கங்காரு ஒரே குதிப்பில் எத்தனை தூரம் செல்லும்?
9மீட்டர்.
2. மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு எது?
ஆமை.
English words & meanings :
Junky - useless or of little value. Adjective. எதற்கும் உதவாத குப்பை. பெயரளபடை. Junkie - one who is addicted to alcohol. Noun. குடிப்பழக்கம் அடிமை பட்டவர். பெயர்ச்சொல்
ஆரோக்ய வாழ்வு :
வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள சுண்ணாம்புச்சத்து ரத்தக்குழாய்களைத் தளர்த்தி,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
NMMS Q 11
nescod' என்ற மாற்றியமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்படும் அர்த்தமுள்ள வார்த்தை என்ன?
விடை : second
ஜூன் 27
பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்
பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்
ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்
ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.
பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்
பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிக்கதை
பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.
அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.
அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.
கணவான், எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா? என்று கேட்டார்.
கோட் சூட் வாலிபன் சொன்னான், நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்.
எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்.
அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.
என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா, என்றான்.
இன்றைய செய்திகள்
27 .06.22
★சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
★தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.
★அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை - இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது.
★பூச்சிகளை பிடித்து உண்ணும் அரிய வகை தாவர இனம் மேற்கு இமயமலைப் பகுதியில் கண்டுபிடிப்பு.
★ரஷிய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை; எந்த சலுகையும் வழங்க முடியாது – லிதுவேனியா அறிவிப்பு.
★அரசுப்பள்ளிகளில் செஸ் போட்டிகள் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடத்த வேண்டும்; வெற்றிபெறும் மாணவர்கள், மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்ப்பதற்கும், செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்; பள்ளிக்கல்வித்துறை.
★உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஜோடி தங்கம் வென்று சாதனை.
★காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய நீச்சல் அணி அறிவிப்பு.
★ரஞ்சி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது மத்திய பிரதேச அணி.
★பெண்கள் கிரிக்கெட்; இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி.
Today's Headlines
🌸In Chennai to supervise and manage the monsoon rain and its impacts 15 IAS officers were appointed.
🌸 There is a chance for rain for 4 days on the coming days - prediction by Metrology Department
🌸Students who studied in government school till 12th then going for the Higher studies will get the stipend of 1000 rs. The registration process through website is started.
🌸 The special and rare carnivorous plants which eat insects are discovered in West Himalayas.
🌸The country Lithuania declared that the transport of Russian goods will be stopped. There won't be any privileges.
🌸In government school the chess competition among students should be conducted between July 11th and August 5. The winners will be awarded with a tour to Mamallapuram where the Olympiatic chess tournaments are going on and will be allowed to play with the chess players there - Education Department .
🌸In World level Archery competition Indian Pair won the gold medal.
🌸Women's cricket against Sri Lanka Indian team won again for the 2nd time
Prepared by
Covai women ICT_போதிமரம்
Comments
Post a Comment