Skip to main content

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.06.2022

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.06.2022

 இப்புதிய கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிக சிறப்பாய் அமைய போதிமரம்_Covai women ICTன் வாழ்த்துகள்

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: மருந்து

குறள் : 943

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள்:

உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்

பழமொழி :

Be slow to promise but quick to perform

ஆலோசித்து வாக்கு கொடு. விரைந்து நிறைவேற்று

இரண்டொழுக்க பண்புகள் :

1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.

2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.

பொன்மொழி :

எடுத்த செயலை  முடிக்கும் ஆற்றல் வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளிக் கூடாது.

      -- அன்னை தெரசா

பொது அறிவு :

1. கறையான் அரிக்காத மரம் எது?

 தேக்கு மரம். 

2. பிளாஸ்டிக் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

 ஜெர்மனி.

English words & meanings :

Adapt -   Changing yourself for the new situation. Noun. 

ஏற்ப, பொருத்தமாக்கு. இது ஒரு வினையெச்ச வார்த்தை.

ஆரோக்ய வாழ்வு :

1.தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படும். இரத்தசோகை சரியாகும்.

     2.தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டுவர வயிற்றுப்பூச்சிகள் அழியும்.

 NMMS Q1

55 மாணவிகள் உள்ள ஒரு குழுவில், 

ஐஸ்வர்யா, ஏறுவரிசையில் 36 வது

இடத்தில் உள்ளார். இறங்குவரிசையில்

அவளின் இடம் யாது?

(1) 19 (2) 20

(3) 21 (4) 22

விடை 20

நீதிக்கதை

பகுத்தறிவு

துறவி ஒருவர் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றதைப் பார்த்தீர்களா? என்று மரியாதையின்றி அதிகாரத் தோரணையில் கேட்டான். 

அதற்கு அந்த துறவி அப்படி யாரும் சென்றதாகத் தெரியவில்லை என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து ஐயா, இதற்கு முன் யாராவது இந்த வழியாகச் சென்றார்களா? என்று கேட்டார். 

அதற்கு அத்துறவியோ ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு ஒருவன் சென்றான் என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். 

அவனும் துறவியிடம் வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா? என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். 

இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர் என்று சொன்னார். ஆச்சரியம் அடைந்த மன்னர், துறவியைப் பார்த்து துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் சென்றது வீரன் என்றும், அடுத்ததாக சென்றது அமைச்சர் என்றும் எப்படிச் சரியாக சொன்னீர்கள் என்று கேட்டான். 

அதற்கு துறவி இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி, முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது என்று பொறுமையாக மன்னரிடம் விளக்கிக் கூறினார்.

இன்றைய செய்திகள்

13.06.22

★சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 37 அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு.

★சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் திட்டம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

★ தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

★சென்னையில் ரூ.905 கோடியில் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டம்: நெரிசல், காற்று மாசுவை குறைக்க நடவடிக்கை.

★வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் (சிபிடிடி) சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.

★கரோனா 3-வது அலைக்குப் பிறகும் இந்திய பொருளாதாரம் வலிமையுடன் உள்ளது - அமெரிக்க நிதி அமைச்சகம் தகவல்.

★மரண தண்டனைகள் ரத்து செய்யப்படுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. இனி மரண தண்டனைகளுக்கு பதிலாக மாற்று தண்டனைகள் வழங்கப்படும் என்றும் மலேசிய அரசின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

★தேசிய சீனியர் தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் சாம்பியன்.

★புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா வெற்றி.

★கேலோ இந்தியா தொடர் : தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன்.

Today's Headlines 

★ 37 officers including Health Secretary Radhakrishnan were transferred by Government of Tamil Nadu .

 ★ UGC has advised to create awareness among the students about the plan to hoist the national flag at home on the eve of Independence Day.

 ★ Chennai Meteorological Department has forecast heavy rain in one or two places in 8 districts including Salem and Vellore in Tamil Nadu today.

 ★ Rs 905 crore efficient traffic management project in Chennai: Measures are taken to reduce congestion and air pollution.

 ★ The number of people filing income tax returns has increased, said Sangeeta Singh, chairperson of the Central Board of Direct Taxes (CPDT).

 ★ Indian economy remains strong after Corona 3rd wave - US Finance Ministry

 ★ The Malaysian government has announced the abolition of the death penalty.  The Malaysian government's prime minister's office has said the death penalty will be replaced by an alternative.

 ★ National Senior Athletics: Hima Das Champion in 100m Run.

 ★ Pro Hockey League: India won the game thus by giving shock to Belgium.

 ★ Kelo India Series: Tamil Nadu Women's Football Team won Championship 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers