குரூப் 2 தேர்வில் எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்:TNPSC தேர்வில் விடையளிக்காத கேள்விகளுக்கு "நெகட்டிவ் மார்க்.
தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு வரும் 21 ஆம் தேதி நடைபெறும்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்பஅரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2A தேர்வை வரும் மே 21 ஆம் தேதி நடத்த உள்ளது. இதற்கான அட்மிட் கார்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in-யில் கடந்த வாரம் வெளியிட்டது. தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை (TNPSC Group 2 Hall Ticket 2022) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TNPSC தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வில் நெகட்டிவ் மார்க் வழங்கப்படும் என TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குரூப் 2 தேர்வில் (TNPSC Group 2 examination) எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., "தேர்வர்கள் தங்களின் விவரம் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாளை தேர்வர் பெற்றதும் அதில் உள்ள உங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். ஏதேனும் விவரங்கள் தவறாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன்பே மாற்றிக்கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் உங்களுடைய பதிவு எண்ணை தவறாக எழுதி இருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இருந்து இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும். அத்துடன், மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை ‘Shading’ செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலோ அல்லது விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலோ (tnpsc group 2 exam date 2022) இருந்தாலும் 5 மதிப்பெண் கழிக்கப்படும். ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில் கை விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.
எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும். எனவே தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment