ONGC-யில் 3614 காலிப்பணியிடம் அறிவிப்பு. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ONGC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ongcindia.com ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஹைலைட்ஸ்:ONGC-யில் 3614 காலிப்பணியிடம் அறிவிப்பு.
டிப்ளமோ, ஐடிஐ சான்றிதழ் படித்தவர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 22, 2022 ஆகும்.
வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC), சுமார் 3614 அப்ரண்டிஸ் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு (ONGC Recruitment 2022)அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் தங்களின் விண்ணப்பபடிவத்தை மே 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்த நிலையில், இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை மே 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ONGC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ongcindia.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பெறப்பட்ட தகுதியின் அடிப்படையில் பயிற்சியாளர்களின் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான (ongc recruitment 2022 apprentice) முடிவுகள் மே 23 அன்று வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மெயில் ID மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் இது குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக சரிபார்க்கவும்.
காலியிட விவரம்:
வடக்குத் துறையில் 209, மும்பை துறையில் 305, மேற்குத் துறையில் 1434, கிழக்குத் துறையில் 744, தெற்குத் துறையில் 694, மத்தியத் துறையில் 228 என மொத்தம் 3614 காலிப் பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பின் (ongc apprentice recruitment 2022) மூலம் நிரப்பப்படும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 15, 2022 தேதியின்படி, 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர்களின் பிறந்த தேதி மே 15, 1998 முதல் மே 15, 2004-க்குள் பிறந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் இருந்து தளர்வு வழங்கப்படும். PwBD பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வி தகுதி:
அப்ரண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ, ITI சான்றிதழ் அல்லது UG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பெறப்பட்ட தகுதியின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியில் சமநிலை ஏற்பட்டால், அதிக வயதுடைய ஒருவர் கருதப்படுவார். எந்த நேரத்திலும் கேன்வாஸ் செய்வது அல்லது செல்வாக்கு செலுத்துவது அனுமதிக்கப்படாது, மேலும் இது கருத்தில் கொள்ளப்படாமல் போகலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 27 முதல் மே 22 வரை ONGC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான ongcapprentices.ongc.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பதிவு செயல்முறை இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. பாகங்கள் I மற்றும் II. பகுதி-I பதிவுக்கு விண்ணப்பதாரர்கள் பெயர், பிரிவு மற்றும் கடவுச்சொல் போன்ற அடிப்படை தகவல்களை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் ஐடியுடன் வெற்றிகரமான பகுதி-1 பதிவுக்குப் பிறகு, வேட்பாளர் அவர் நிறுவிய ID மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மீண்டும்உள்நுழைய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை எதிர்கால குறிப்பு/பயன்பாட்டிற்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.
பகுதி-II பதிவுக்கு விண்ணப்பதாரர் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவச் சான்றுகளை பதிவேற்ற வேண்டும். பின்னர் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது இறுதி சமர்ப்பிப்பு படியாகும். அதன் பிறகு வழங்கப்பட்ட தகவலை வேட்பாளர் மாற்ற முடியாது. விண்ணப்பதாரர்கள் போர்ட்டலின் தரவை கவனமாக நிரப்பவும், இறுதி சமர்ப்பிப்புக்கு முன் அவற்றை ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
Comments
Post a Comment