தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு இதுவரை 6.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை எடுக்கும் ஆசிரியர் அனைவரும் கட்டாயம் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக 2019 ஆம் ஆண்டிற்கு மூன்று ஆண்டுகளாக டெட் தேர்வு நடைபெறவில்லை. இந்நிலையில் தான் இந்தாண்டிற்கான டெட் தேர்விற்கான விண்ணப்பப்படிவம் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதியோடு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இணையதளப்பிரச்சனையின் காரணமாக ஏப்ரல் 12 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று கூடுதல் அவகாசம் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதுவரை தமிழகத்தில் டெட் முதல் நாள், டெட் இரண்டாம் தாள் அனைத்துக்கும் சேர்த்து மொத்தம் 6.50 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.
இதற்கானத் தேர்வு வருகின்ற ஜூலை மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை டெட் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment