தேர்தலுக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை? ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் வேலை நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது. அதோடு 12ஆம் தேதி பூத் ஸ்லிப் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதியான 19ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு முந்தைய தினமான 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பாடலாம் என்று பேசப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் தேர்தலுக்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி அனைத்து வாக்குச் சாவடிகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும். எனவே 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment