ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற (இன்று) பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ மாணவிகளுக்கு 2021- 22 ஆம் வருடத்துக்கான மத்திய அரசு சார்பில் மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதியான மாணவ, மாணவிகள் escholarship.gov.in என்ற இணையதள முகவரியில் (இன்று) பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment