கொரோனா பரவல்
தொற்று முழுமையாக குறையாத நிலையில் 1 –
8 வரையிலான
வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் ஆன்லைன் மூலமாகவே
பாடங்களை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில்
கொரோனா பரவலால் மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் கல்வி நிலை என்பது கேள்வி குறியாக
உள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையை கருத்தில் கொண்டு கடந்த 2021 செப்டம்பர் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கம்
போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10 மற்றும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு
திருப்புதல்தேர்வும் நடத்தப்பட்டது. பிறகு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்தது.
இந்த
நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி
ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால்
திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. மீண்டும்
தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி
மூலமாகவும் வகுப்புகள் நடந்து வந்தது. இதற்கிடையில் அரசின் முயற்சியால் கொரோனா
பாதிப்புகள் சற்று குறைய தொடங்கியதும் மீண்டும் 1-12
வரை அனைத்து
வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
தற்போது
பொதுத்தேர்வு நடைபெற இன்னும் முழுமையாக இரண்டு மாதங்களே உள்ள நிலையில் விரைந்து
பாடங்களை நடித்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்
கொரோனா பரவல் தொற்று முழுமையாக குறையாத நிலையில் 1 –
8 வரையிலான
வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் பெற்றோர்கள்
கோரிக்கை விடுத்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டு முடியவில்லை நிலையில் ஆன்லைன்
மூலமாகவே தேர்வுகளை நடத்தவும். அடுத்த கல்வியாண்டு முதல் நேரடி வகுப்புகளை
தொடங்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Comments
Post a Comment