வணக்கம் . நமது குழுவின் சார்பாக கொரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சி பாடங்களையும் படிப்பதற்கு தேவையான கல்வி கற்றல் கையேடுகளையும் , வழங்கி வருகின்றோம். அந்த வகையில் ஏற்கெனவே 9,10,11,12 வகுப்புகளுக்கு வழங்கினொம். இப்போது 2 முதல் 8 வகுப்புகள் வரை புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் வழங்கியுள்ளது நமது அரசு. கோரோனாக் காலத்தில் கிட்டத்திட்ட 600 நாட்களுக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வருகை புரிந்து உள்ளனர். எனவே இந்நிலையில் மீண்டும் மாணவர்களை கற்றல் சூழ்லுக்கு தகுதிப்படுத்த இந்த புத்தாகக [அயிற்சிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்காண விடைகள் இங்கு வழக்கியுள்ள்ளோம். எனவே இதனை பயன்படுத்தி தங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். அது நிறைவு பெற்றவுடன் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புத்தாக்க பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் மாணவர்களின் கல்வி பாதிப்படையாத வகையில் பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு கற்றல் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் தொற்று கட்டுக்குள் வந்துள்ளமையால் நவம்பர் 1 தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.அதனால் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வெகுநாளாக வீட்டில் இருந்து மீண்டும் பள்ளிக்கு வருவதால் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் போக்கும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும்
அதனை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அடிப்படை இணைப்பு பயிற்சி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னுரிமை பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். பாடங்களின் அடிப்படையில் புத்தாக்க பயிற்சி 45 முதல் 60 நாட்களுக்கு கற்று தரப்படும். இந்த பயிற்சி நிறைவு பெற்றவுடன் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Topic- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் - புத்தாக்கப்பயிற்சி விடைகள் -8 - சமத்துவம் பெறுதல்
File type- PDF
Comments
Post a Comment