நவம்பர் 1 ஆம் தேதி முதல் பழைய செல்போன்கள், ஆண்டிராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களின் பழைய வெர்சன்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவையை நிறுத்த வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு எப்படி CALL வசதி அவசியமோ அது போல் காலப்போக்கில் வாட்ஸ் அப் செயலியும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதற்காகவே பலரும் பட்டன் போனில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு மாறி விட்டனர்.
வாட்ஸ் அப் நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதே போல், ஆண்டுதோறும் பழைய மாடல் செல்போன்கள் மற்றும் இயங்குதளங்களுக்கான வசதியையும் நிறுத்தி வருகிறது.
அதன்படி, வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் சேவை துண்டிப்பு செய்யப்பட உள்ள பழைய செல்போன் மாடல்கள், இயங்குதளங்களின் பட்டியலை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது வெளியிட்டு உள்ளது. அதில், ஐ போனில் பயன்படுத்தப்பட்டு வரும்
வாட்ஸ் அப் சேவையை இழக்கும் இயங்குதளங்கள்:
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் 10 வது வெர்சனுக்கு குறைவான வெர்சன்களில் இயங்கும் மொபைல்கள், ஆண்டிராய்ட் வெர்சன் 4.1 க்கு முந்தைய வெர்சன்களின் இயங்கும் செல்போன்கள், கை ஓ.எஸ். 2.5.0 வெர்சனை விட பழைய வெர்சன்களில் இயங்கும் மொபைல்களுக்கான சேவையை நிறுத்த வாட்ஸ் அப் முடிவு செய்திருக்கிறது.
வாட்ஸ் அப் சேவையை இழக்கும் செல்போன்கள்:
ஐபோன் நிறுவனத்தை பொறுத்தவரை, ஐபோன் 6, ஐபோன் 6S plus and ஐபோன் SE மாடல் செல்போன்கள் மற்றும் அதற்கு முந்தைய மாடல் செல்போன்கள் வாட்ஸ் அப் சேவையை இழக்கின்றன.
அதே போல், சாம்சங் நிறுவன செல்போன்களில் கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி டிரெண்ட் II, கேலக்சி SII, கேலக்சி S3 மினி, கேலக்சி X கவர் 2, கேலக்சி கோர் மற்றும் கேலக்சி ஏஸ் 2 ஆகிய போன்கள் வாட்ஸ் அப் சேவையை இழக்க உள்ளன.
ZTE நிறுவன மொபைல்களை பொறுத்தவரை ZTE கிராண்ட் S ஃப்ளெக்ஸ், ZTE V956, கிராண்ட் X குவாட் V987 and கிராண்ட் மெமோ ஆகிய மாடல் போன்களில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட உள்ளது.
எல்.ஜி. நிறுவனத்தின் லூகிட் 2, ஆப்டிமஸ் F7, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L3 II டூவல், ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L5, பெஸ்ட் L5 II, ஆப்டிமஸ் L5 டூவல், பெஸ்ட் L3 II, ஆப்டிமஸ் L7, ஆப்டிமஸ் L7 II டூவல், பெஸ்ட் L7 II, ஆப்டிமஸ் F6, எனாக்ட், ஆப்டிமஸ் L4 II டூவல், ஆப்டிமஸ் F3, பெஸ்ட் L4 II, பெஸ்ட் L2 II, ஆப்டிமஸ் நிட்ரோ HD, ஆப்டிமஸ் 4X HD and ஆப்டிமஸ் F3Q செல்போன் மாடல்களும் வாட்ஸ் நிறுவனத்தின் சேவையை இழக்க உள்ளன.
இதே போல் ஹுவாவே, சோனி, லெனோவோ உள்ளிட்ட நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழைய செல்போன் மாடல்களுக்கு வாட்ஸ் அப் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. எனவே வாட்ஸ் அப் தரவுகளை பேக் அப் செய்து கொள்ளுமாறும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டு உள்ளது.
வாட்ஸ் அப் சேவை வாபஸ் என்பது உடனடியாக நிகழாது எனவும்,அந்த நிறுவனம் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் புதிய வசதிகளுடன் கூடிய அப்டேட்டை இந்த பழைய செல்போன்களுக்கு வெளியிடும் சமயத்தில், அதனால் அந்த போன்களில் தொடர்ந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்த இயலாது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment