ஒரு வருங்கால வைப்பு நிதி பயனர் தனது வாரிசுகளின் உயர்கல்வி படிப்புக்காக தனது PF தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை பெற்றுக்கொள்வதற்கான சில வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
PF கல்விக்கடன்
பொதுவாக பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளை மேற்கொள்வதற்கு கல்வி கட்டணம், புத்தக கட்டணம் என அதிகளவு பணம் செலவாகும். இருந்தாலும் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு கல்வி கட்டாயம் என்பதால் பல பெற்றோர்கள் இந்த கட்டணங்களை செலுத்தி படிக்க வைக்க முன்வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள் பலவும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கடன்களை அளிக்க முன்வருகின்றது. அப்படி கல்விக்காக கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதமும் குறைவு தான்.
அந்த வகையில் குறிப்பிட்ட ஒரு தொகையை கல்விக் கடனாக பெற கடன்களுக்கு பிணையம் தேவையில்லை. இதனுடன் கடன் மதிப்பெண் குறைந்தது 700-750 ஆகவும் இருக்க வேண்டியது அவசியம். என்றாலும் வருங்கால வைப்பு நிதி (EPF) அமைப்பு தனது ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விக்கடனை சிறப்பான சலுகையுடன் அளிக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்கள் அந்த தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை. அதாவது ஒரு ஊழியர் தான் பணி செய்யும் போது சேமித்த ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை கடன்களுக்காக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த PF கணக்குகளில் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட 12% தொகை சேமித்து வைக்கப்படும். இந்த PF கணக்கில் இருந்து தற்போது கல்விக்காக, EPF பங்களிப்பு மற்றும் திரட்டப்பட்ட வட்டியின் மொத்தத்தில் 50% வரை திரும்பப் பெறலாம். குறிப்பாக ஒரு ஊழியர் 3 முறை இந்த சேவையை பயன்படுத்தலாம். அதற்காக சில நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், பயனர் ஒருவர் குறைந்தது 7 வருடங்களுக்கு EPF உறுப்பினராக இருத்தல் வேண்டும். இப்போது கல்விக்கான நிதி EPF பங்களிப்பு, ஓய்வூதிய இலக்கு, கல்விக்கு தேவையான நிதி போன்றவற்றின் அடிப்படையில் அளிக்கப்படும்.
அதாவது வருங்கால வைப்பு நிதி விதிகளை கருத்தில் கொண்டால், பணம் திரும்ப பெறுதலானது, ஊழியரின் பங்கு மற்றும் வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இப்போது கல்விக்காக அதிகளவு தொகையை சேமிப்பில் இருந்து எடுத்து விட்டால் உங்கள் ஓய்வூதிய காலத்தில் அந்த மொத்த தொகை சராசரியாக குறையும். அதாவது, கல்விக்காக ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதில் வட்டி, பங்களிப்பு உட்பட ரூ.8 லட்சம், ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ளன என்றால் ரூ.4 மட்டும் முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் EPF திரும்ப பெறுவதை 30%ஆக குறைக்கலாம்.
இப்படி செய்தால், முன்பணத் தொகை 2.4 லட்சமாக குறையும். இந்த இடைவெளியை ஈடுசெய்ய ரூ.2.60 லட்சம் கடன் வாங்க வேண்டும். கல்விக்காக EPF திரும்ப பெறுவதற்கு,
· முதலில் EPFO இணையதளத்தை திறக்கவும்.
· உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
· இதற்கு UAN எண் தேவைப்படும்.
· UAN எண் இல்லையென்றால் சில விவரங்களை பதிவிட்டு ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
· இப்போது கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.
· கணக்கில் உள்நுழைந்து ‘ஆன்லைன் சேவைகள்’ என்ற ஆப்ஷனுக்கு சென்று படிவம் 31 ஐ கிளிக் செய்யவும். படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவும்.
· அந்த படிவம் EPF அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
· அதனுடன் பாடநெறி, படிப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் செலவு தொடர்பான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
· இந்த விவரங்கள் சரிபார்க்கபட்டவுடன் ஒப்புதல் வழங்கப்படும்.
Comments
Post a Comment