அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு சிறுநீரகம் செயலிழந்ததால் மூளைச்சாவு ஏற்பட்டது. உடனடியாக ஆக்சிஜன் கொடுப்பதை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.உறவினர்கள் சம்மதத்தின் பேரில் அவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து சிறுநீரகம் பொருத்தி பரிசோதிக்கப்பட்டது.
பெண்ணின் உடலில் பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்படத் தொடங்கியது. பன்றியின் சிறுநீரகம் அப்பெண்ணின் உடம்புக்கு வெளியே வைத்து அவரின் ரத்த குழாய்களில் இணைக்கப்பட்டு 3 நாட்கள் சோதனை முறையில் பராமரிக்கப்பட்டது.
இதனால் மூளைச்சாவு அடைந்தவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாமல் இயங்கியது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் வழக்கமான நிலைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment