ஸ்பெயின் நாட்டில் உள்ள கனேரி தீவுக்கூட்டத்தில் லா பல்மா என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள கும்ரி விய்ஜா என்ற எரிமலையானது கடந்த 19 ஆம் தேதி முதலே சீற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக கடந்த 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் கும்ரி விய்ஜா எரிமலையில் ஏற்படும் முதல் சீற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் லா பால்மா தீவில் ஆற்றல் மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக, கும்ரி விய்ஜா எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து எரிமலைக்குழம்பு வெளியேறி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 6,000 பேர் மீட்பு படையினரின் உதவியோடு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். ஆனாலும், இந்த சீற்றத்தால் வெளிவந்த எரிமலை குழம்பினால் சுமார் 1,800 வீடுகள் தீக்கு இரையானது. இந்நிலையில் எரிமலை குழம்பு, இன்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீட்புக்குழுவினர் எரிமலை சீற்றத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Comments
Post a Comment