வணக்கம் ஆசிரியப்பெருமக்களே. நம் பள்ளியானது கிட்டத்திட்ட 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பதால்
பள்ளி மாணவர்கள் மனநிலையை கருத்தில் கொண்டு தற்போது பாடங்களை நடத்த தொடங்குவதற்கு முன் அவர்களுக்கு அனைத்து பாடங்களிலும் அடிப்படை செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி கற்பிக்க ஏதுவாக நம்முடைய தயாரிப்புகள் இருக்க வேண்டும் . நமது அரசானது முதல் 15 நாட்களுக்கு ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளை கற்பிக்க சொன்னாலும், நம் வகுப்பில் 6ஆம் வகுப்பு வரை அடிப்படை செயல்பாடுகளை நாம் இணைந்து கற்பிக்க வேண்டிய சூழலில் உள்ளோம். எனவே அதற்காண பாடக்குறிப்பாக தான் நாங்கள் எங்களுக்கு தோன்றிய வகையில் அனைத்து பாடங்களிலும் அடிப்படை கருத்துக்கள் என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அதனை சேகரித்து அதற்காண பாடக்குறிப்பை தயாரித்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும், என நினைக்கின்றோம் . எனவே இதனை பயன்படுத்தி தங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் மிச்சப்படுத்தி பாடக்குறிப்பை எழுதிட வேண்டுமாய் இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றோம். நம்முடைய வழக்கமான பாடங்களானது 15 ஆம் தேதிக்குபிறகு ஆரம்பிக்கலாம் எனவே இதனை பயன்படுத்தி இப்பொழுது 15 நாட்களுக்கு பாடத்திட்டத்தை எழுதி வைத்து பின் பாடங்களுக்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும் எனவே தொடர்ந்து பாடக்குறிப்புகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி.இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Topic-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாற்றை நோக்கி பாடக்குறிப்பு (1-15)
File type- PDF
வணக்கம்.நான் தேவகோட்டை.நகராட்சி உயர்நிலைப்பள்ளி.இந்தப்பள்ளி துவங்கி 25ஆண்டுகள்.அதற்குமுன் நடுநிலைப்பள்ளி பணி.சாதனை ஆசிரியை.என்னிடம் படித்த குழந்தைகள் எல்லாப்பாடங்களில் நூறு சதவீதம் வாங்கி மகிழ்வர்.பத்து ஆண்டுகளாக சமூக அறிவியலில்.முதலில் ஒரு மதிப்பெண் பின் இரண்டு, ஐந்து மதிப்பெண் கள் வாங்க வைப்பேன்.நம் பாடத்தை தெளிவாக எளிதாக ஏன் , எதற்காக, எப்படி என் சொல்லி புரிய வைப்பேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete