கல்வியைத் தரமானதாகவும், பரவலாகவும் மற்றும் கிராம - நகர்ப்புற வேறுபாடுகளை அகற்றவும் தொலைக்காட்சி ஒரு சிறந்த ஊடகமாக அறியப்பட்டது. 1976 ஆம் ஆண்டு நிறைவுற்ற சைட் திட்டம் இதற்கான ஆய்வு உறுதிகளை வழங்கியது.
இதனால் ஊக்கம் பெற்ற இந்திய கல்வியாளர்கள் தொலைக்காட்சியை கல்வி வளர்ச்சிக்கான ஒரு ஊடகமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். 1983 இல் இன்சாட் 1பி என்ற தொலைத்தொடர்பு செயற்கை ஏவப்பட்டதன் காரணமாக நாட்டில் மண்டல ஒளிபரப்புகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தொலைக்காட்சி ஒளிப்பரப்பு நிலையங்களும் இணைக்கப்பட்டது..
Topic- Kalvi Tholaikatchi Today/Class 6/Term 1/English/The Apple Tree And The Farmer
File type- video
இதன் காரணமாக இவ்வசதியை பயன்படுத்தி நாடெங்குமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு பொதுவான கல்வி நிகழ்ச்சிகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதன் விளைவாக பல்கலைகழக நிதி நல்கை குழு தினந்தோறும் ஒரு மணி நேரம் உயர் கல்வி நிகழ்ச்சிகள் வழங்கும் 'நாடெங்கும் கல்லூரி வகுப்பு' என்னும் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்சனுடன் இணைந்து வழங்க தொடங்கியது. இத்திட்டம் 1984 ஆகஸ்ட் 15 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. விடுமுறை தினங்களை தவிர ஏனைய நாட்களில் தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை இக்கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டன். மாலையில் 4 மணி முதல் 5 மணி வரை மறு ஒளிபரப்பு நடைபெற்றது.
Comments
Post a Comment