Skip to main content

TNPSC பொதுத்தமிழ் வினா விடை – பிரிவு 4

நமது குழுவின் சார்பாக வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க TNPSC பொதுத்தமிழ் வினா விடைகள்வழங்கி வருகின்றோம். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும் .

Q.1)ஜீவகாருண்யம் போதித்தவர் யார்?

a)வள்ளலார்

b) திருஞானசம்பந்தர்

c) திருத்தக்கதேவர்

d) திருமூலர்

Q.2) கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது ?

a) ஏவல் விடை

b)இனமொழி விடை

c) மறை விடை

d) நேர் விடை

Q.3) “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ” என்ற வரி இடம்பெற்றுள்ள பாடல் எது ?

a)திருக்குறல்

b)சிலப்பதிகாரம்

c)தொல்காப்பியம்

d)தண்டியலங்காரம்

Q.4) போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது?

a) பரிபாடல்

b) கலி

c) தரணி

d)பரணி

Q.5) கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார்?

a) அனுமன்

b) பரதன்

c)குகன்

d) சுக்ருதன்

Q.6) சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது ?

a)பரிபாடல்

b) முதுமொழிக்காஞ்சி

c) பட்டினப்பாலை

d) பதிற்றுப்பத்து

Q.7) ஆற்றுணா என்பது ?

a)வழிநடை உணவு

b) சிற்றுண்டி

c) உணவு அருந்தாமை

d) நீர் அருந்துதல்

Q.8) ஐங்குறுநூற்றில் பழைய உரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

a)567

b)469

c)485

d)524

Q.9) ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் யார்?

a) விளம்பி நாகனார்

b) பூதஞ் சேந்தனார்

c)மூவாதியார்

d) வண்ணப்புறக் கந்தத்தனார்

Q.10) ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்?

a)திருமூலர்

b) திருஞானசம்பந்தர்

c) திருத்தக்கதேவர்

d) நல்லாதனார்

Q.11) தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?

a) உ .வே .சா

b)மறைமலை அடிகள்

c) உமறுப்புலவர்

d) இளங்கோவடிகள்

Q.12) தாவாரம் என்பதின் பிழைத்திருத்தம்?

a)தாழ்வாரம்

b) தாவரம்

c) தாழ்வு வாரம்

d) தா + வரம்

Q.13) இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்?

a) திருக்குறள் மற்றும் தொல்காப்பியம்

b)சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

c) ஐங்குறுநூறு மற்றும் புறநானூறு

d) கலித்தொகை மற்றும் நன்னூல்

Q.14) முதல் தூது இலக்கியம் ?

a)நெஞ்சுவிடு தூது

b) அழகர் கிள்ளைவிடுதூது

c) காக்கை விடு தூது

d) பஞ்சவனத் தூது

Q.15) சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல் ?

a) பொன்னியின் செல்வன்

b) பார்த்திபன் கனவு

c)அலை ஓசை

d) சிவகாமியின் சபதம்

Q.16) அணியிலக்கண முதல் நூல் எது?

a)தண்டியலங்காரம்

b) வீரசோழியம்

c) மாறனலங்காரம்

d) தொன்னூல் விளக்கம்

Q.17) 323 திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை ?

a)பாடாண்திணை

b) வஞ்சி திணை

c) தும்பைத் திணை

d) வாகைத் திணை

Q.18) கலிப்பாவுக்கு உரிய ஓசை ?

a) ஒழுகிசை அகவலோசை

b)துள்ளலோசை

c) ஏந்திசை அகவலோசை

d) செப்பலோசை

Q.19) வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல் ?

a)நேர் விடை

b) ஏவல் விடை

c) இனமொழி விடை

d) மறை விடை

Q.20) கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல் ?

a) சுட்டு விடை

b) மறை விடை

c)ஏவல் விடை

d) வினா எதிர் வினாதல் விடை

Q.21) அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு?

a) அன்பில் செப்பேடுகள்

b) கன்னியாகுமரிச் செப்பேடுகள்

c) லேடன் செப்பேடுகள்

d)வேள்விக்குடிச் செப்பேடு

Q.22)”வெரூஉம் ” என்பதன் இலக்கண குறிப்பு :

a)ஆகுபெயர்

b)அளபெடை

c)முற்றோச்சம்

d)ஈற்றுபோலி

Q.23) இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல்?

a) சிலப்பதிகாரம்

b) புறநானூறு

c)கலித்தொகை

d) நன்னூல்

Q.24) இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் ?

a) இன்னா நாற்பது

b) திரிகடுகம்

c) ஏலாதி

d)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

Q.25) வைகறைப் பொழுதுக்குரிய நிலம் ?

a)மருதம்

b) நெய்தல்

c) பாலை

d) குறிஞ்சி

Q.26) கம்பராமாயணத்தின் முதல் பகுதி எது?

a)பாலகாண்டம்

b) அயோத்தியா காண்டம்

c) கிட்கிந்தா காண்டம்

d) யுத்த காண்டம்

Q.27) திருமுறைகளுள் பழமையானது எது?

a) தேவாரம்

b)திருமந்திரம்

c) திருவாசகம்

d) திருக்கோவையார்

Q.28) வேளாண் வேதம் எனப்படும் நூல் எது?

a)நாலடியார்

b) புறநானூறு

c) நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

d) சிலப்பதிகாரம்

Q.29) தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் எது?

a)புறநானூறு

b) ஆசாரக்கோவை

c) நான்மணிக்கடிகை

d) முதுமொழிக்காஞ்சி

Q.30) தொன்னூல் விளக்கம் நூலின் ஆசிரியர் யார்?

a) வீரசோழியம்

b) ஜி.யூ.போப்

c)வீரமாமுனிவர்

d) பெருந்தேவனார்

Answers:
1 A     11 B     21 D
2 B     12 A     22 B
3 C     13 B     23 C
4 D     14 A     24 D
5 C     15 C     25 A
6 A     16 A     26 A
7 A     17 A     27 B
8 B     18 B     28 A
9 C     19 A     29 A
10 A     20 C     30 C

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Lesson plan For -6th Tamil - _பாரதம் அன்றைய நாற்றங்கால்

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Zeal study Lesson plan For -7th Tamil - கவிதைப்பேழை | விருந்தோம்பல் | பருவம் 3

வணக்கம் . முதலில் நமது குழுவின் சார்பாக அனைவருக்கு புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த கல்வியாண்டில் மேன்மேலும் பல வளர்ச்சிகளையும், சாதனைகளையும் பெற வாழ்த்துக்கள்.

Followers