Bridge course workbook kalvi TV Channel list schedule இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகம் kalvi TV 40 days schedule
இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம் Bridge courseமற்றும் பயிற்சி புத்தகம் workbook காணொளிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பரப்பாகிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆணையின்படி COVID -19 காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட இடைவெளியை சரி செய்யும் பொருட்டு இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இணைப்புப் பயிற்சி கட்டகம் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் உருவாக்கப்பட்டதே தற்போது பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது இந்த இணைப்பு பயிற்சி புத்தகத்தில் இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது தொகுதி ஒன்றில் தமிழ் ஆங்கிலம் பாடல்களும் இரண்டாம் பிரிவுதொகுதியில் அறிவியல்சமூகஅறிவியல்பாடங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இணைப்பு பாடப் பயிற்சி சார்ந்த ஒளிபரப்பானது வரும் 22ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சிகளில் தினசரி ஒரு பாடம் வீதம் ஒவ்வொரு வகுப்பிற்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒதுக்கப்பட்ட அதற்கான கால அட்டவணை தற்போது வழங்கப்பட்டுள்ளது இதனை அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இணைப்பு பயிற்சி புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்களை பயன்படுத்தி வீட்டில் இருந்தவாறே கல்வி தொலைக்காட்சி வாயிலாக காணொளிகளை கண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பெற்று அதன் வாயிலாக பயிற்சி புத்தகத்தில் தேவையான விடைகளை சரியாக விடை அளிக்க பயிற்சி அளிக்க வேண்டும் மேலும் பாடப்புத்தகத்தில் போதுமான அளிக்கக்கூடிய இடம் இல்லாமல் இருந்தால் மாணவர்கள் கூடுதலாக தங்களுடைய குறிப்பேடுகளில் விடைகளை எழுதி பள்ளிகளுக்கு திரும்ப வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது நமது வலைதளத்தில் தொடர்ந்து அந்த காணொளிகளும் பயிற்சிக்கான விடை குறிப்புகளும் பதிவிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் எனவே ஆசிரியர்களும் மாணவர்களும் நமது வலைதளத்தை தினசரி பார்வையிட்டு அதற்கான பயிற்சிகளையும் அதற்கான விடை குறிப்புகளையும் அதன் தொடர்புடைய காணொளிகளையும் கண்டு எளிதில் விடை அளிக்கும் படியும் இப்பெரும் தொற்றுக் காலத்தில் பள்ளி படிப்பை மாணவர்கள் தொடங்குவதற்கு ஒரு நல்வாய்ப்பாக இந்த இணைப்பு பாடப் பயிற்சி புத்தகத்தையும் பயிற்சிகளையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Comments
Post a Comment