22 லட்சம் பேர் எழுதும் ஜேஈஈ தேர்வில், தமிழில் எழுதலாம் என்கிற வழி இருந்தாலும், வெறும் 1200 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளார்கள். தமிழகத்தில் இருந்து மற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பது உண்மை என்றாலும், தமிழகம் முதல் நான்கு மாநிலங்களில் இடம்பெறவில்லை.
பானி பூரி விற்பவர்கள் என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் எள்ளி நகையாடப்படும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2.4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தெலுங்கு பேசும் இரு மாநிலங்கள் மட்டுமே 5.25 லட்சம் விண்ணப்பங்களைத் தருகிறது. இது மொத்த விண்ணப்பங்களில் 25%.
தமிழ் மொழியில் தேர்வு எழுதவும் வாய்ப்பு உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து தமிழில் எழுத விண்ணப்பித்தவர்கள் 1200 மட்டுமே. தமிழில் தேர்வு எழுதுபவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் வாசிக்கும் மாணவர்கள் என்று கொண்டால், அவர்களால் இந்தத் தேர்வுகளில் ஏன் பங்கெடுக்க முடியவில்லை? அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தரம் காரணமா? அனைவருமே பி.எட். முடித்த பின்னர் தானே ஆசிரியர்கள் ஆகிறார்கள்? ஆக, பி.எட். தேர்வின் தரமே குறைவா? இல்லை அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளில் சரியாகப் பாடம் நடத்துவதில்லையா?
குஜராத்தி மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள் 44,000 பேர். வங்காள மொழியில் தேர்வெழுத 24,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாநிலங்களில் தாய்மொழிவழி அரசுப் பள்ளிகளின் தரம் தமிழகத்தை விட மேம்பட்டதாக உள்ளதா? அப்படியென்றால் தமிழகத்தின் இந்த நிலைக்குக் காரணம் யாது? சிந்திப்போமா?
ஹிந்தியில் அறிவிப்போ, தேர்வோ இருந்தால் சீன் போடும் அரசியல்வாதிகள், தமிழில் தேர்வெழுத வாய்ப்பிருந்தும் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் தமிழ் விண்ணப்பங்கள் உள்ளதைப் பற்றிப் பேசுவரா?
ஹிந்தி எதிர்ப்பு, தேர்வுகள் எதிர்ப்பு, போராட்டப் பிச்சை வாழ்வு என்று ஓடுகளுக்குள் ஒளிந்துகொள்ளாமல், நேர்மையாகச் சிந்திப்போமா?
நம் தமிழ் வழி மாணவர்களுக்கு நல்லது செய்ய முயல்வோமா?
அல்லது, இதற்கும் மோதி தான் காரணம் என்று பகுத்தறிவு ஜல்லியடிப்போமா?
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வழி சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இவற்றில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
நன்றி
நண்பர்.
நன்றி ; Laguduva Rangacharry Balaji
Comments
Post a Comment