Skip to main content

Aadhaar அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை அப்டேட் செய்வது எப்படி? வழிமுறைகள்

ஆதார் அட்டையில் உள்ள உங்கள் புகைப்படத்தை மாற்ற கீழே விவரிக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்
ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும் என்பது அனைவரும் அறிந்ததே இந்த ஆவணத்தில் ஒரு நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் உள்ளது. வருமான வரியை தாக்கல் செய்தல், பல்வேறு வகையான படிவங்களை நிரப்புதல், விமான பயணம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் இந்த ஆவணம் பொதுவாக அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆதார் அட்டையில் (Aadhaar Card) உள்ள தரவுகளை பயனாளி புதுப்பித்து மாற்றலாம். UIDAI-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது ஆதார் சேர்க்கை மையத்திற்கு செல்வதன் மூலம் தகவல்களை புதுப்பிக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த ஆதார் அட்டையில் உங்கள் படம் மிகவும் பழைய படமாக இருந்து, அதனை மாற்ற வேண்டும் என நினைத்தால், அதனை கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி எளிதாக மாற்றலாம்:
வழிமுறை 1: அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையம் அல்லது ஆதார் சேவா மையத்திற்கு செல்லவும்
வழிமுறை 2: UIDAI இணையதளமான https://uidai.gov.in/ என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள். ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கவும் (திருத்தம் படிவம் / புதுப்பிப்பு படிவம்)
வழிமுறை 3: படிவத்தை நிரப்பவும். படிவத்தை அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்தில் சமர்ப்பித்து உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்கவும்
வழிமுறை 4: அங்குள்ள நிர்வாகி உங்களை புகைப்படம் எடுப்பார்
வழிமுறை 5: இப்போது புதிய புகைப்படத்தை உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிப்பார்கள். உங்களிடம் ரூ .25 + ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்
வழிமுறை 6: புதுப்பிப்பு கோரிக்கை எண் (Update Request Number-URN)
கொண்ட ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்
வழிமுறை 7: புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க URN எண்ணை பயன்படுத்தி தகவலை பெறலாம்.

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study LO Based Lesson plan For -7th Tamil - புதுமை விளக்கு

நமது Zeal study  வழக்கம் போல் இந்த பருவத்திற்கான பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின்

8th Tamil lesson plan மெய்ஞான ஒளி, ஒன்றே குலம் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு

Zeal study shares you all weeks lesson plan for all classes for all classes.In this way we share this week lesson plan also. We always wants to reduce your work load and do your work with very happy and Enjoy. Work with out tension and make your work perfect using our websites and share with your friends too.

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.02.26

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2026

Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

 Zeal study official school morning prayer activities பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2026

Followers