நூலக பாடவேளையில் குழந்தைகளை எப்படி வாசிக்க வைக்கலாம்?
1. சத்தமாக வாசித்தல் : ஆசிரியர் கதையை சத்தமாக வாசித்தல், குழந்தைகளை சத்தமாக வாசிக்க வைத்தல்
2. பகிர்ந்து வாசித்தல் : ஆசிரியர் கதையை வாசிக்கும் போது குழந்தைகள் என்ன வரியை/வார்த்தையை வாசிக்கின்றார் என பின் தொடர்வது.
3. கூட்டு வாசிப்பு : குழந்தைகளே கூட்டாக வாசிப்பது. ஒருவர் மற்றவரிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள்.
4. சுய வாசிப்பு: குழந்தைகள் தனியாக வாசிப்பது.
[இதற்கான புத்தகங்கள் ஒவ்வொரு அரசுப்பள்ளியில் உள்ளன ; புத்தக பூங்கொத்து - 100+ வண்ணத்தில் எளிமையான ; NBT புத்தகங்கள் ; அறிவியல் இயக்கம் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் - இன்னும் இன்னும் வேண்டும் ஆனால் இதில் இருந்து துவங்குவது எளிது]
மேலே கூறியவை அனைத்தும் சமக்ரசிக்ஷா - மகிழ்ச்சியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வாசிப்பு கலாச்சாரத்தையும் உருவாக்கு கையேட்டில் கூறப்பட்டுள்ளவையே. 2020 ஆம் ஆண்டில் வெளியான கையேடு.
SAMAGRA SHIKSHA : Building an inclusive and joyful reading culture for children : 2020
குழந்தைகள் வாசிக்க வைக்க எல்லா முயற்சிகளையும் கூட்டாக எல்லோரும் மேற்கொள்வோம்.
- விழியன்
Comments
Post a Comment