Skip to main content

Zeal study official: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.02.2023

 Zeal study official,பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.02.2023


   திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் எண் : 130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


பொருள்:

;கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.


பழமொழி :

Action speaks louder than words.

சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே. ஜேம்ஸ் ஆலன் 


பொது அறிவு :

1. இமயமலை எந்த நாடுகளைப் பிரிக்கிறது?

 இந்தியா -திபெத் . 

 2.தங்கப் போர்வை நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?

 ஆஸ்திரேலியா.

English words & meanings :

dirty ant - pollutant

ஆரோக்ய வாழ்வு :


பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.


- ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.

NMMS Q

வகைப்பாட்டியல் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்


விடை :அகஸ்டின் பைரமிஸ் டி கேடண்டோல்





மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.


நீதிக்கதை

யார் ஏழை?


ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளை கிராமத்தை சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். இரண்டு நாள் ஒரு குடிசையில் ஏழை விவசாயிகள் கூட இருந்தாங்க. திரும்ப வரும் போது, அப்பா கேட்டார்,


ஏழை எப்படி இருக்காங்கன்னு பார்த்தியா?… இப்ப என்ன சொல்றே? மகன் சொன்னான் ஆமா..அப்பா..என் கிட்ட ஒரு நாய் குட்டி தான் இருக்கு. ஆனால் அவங்க கிட்ட நாலு இருக்கு. 


நம்ம வீட்ல ஸ்விம்மிங் பூல், கார்டன்ல நடுவிலே இருக்கு. ஆனால் அவங்க வீட்டு பக்கத்துல அழகான ஆறு ஓடுது. நாம கலர் கலரா லைட் போட்டு, படங்கள் மாட்டி நம்ம வீட்டு அழகு படுத்தறோம். ஆனா அவங்க வீட்டுல் ரெயின்போ அழகு படுத்துது... நம்ம சுவரோட நம்ம வீட்டு எல்லை முடிஞ்சுடுது. ஆனால் அவங்களுக்கு கண்ணுக்கு எட்டுன் தூரம் வரை அவங்க எல்லை.


நாம காசு குடுத்து அரிசி வாங்குறோம். ஆனா இவங்க நம்ம கிட்ட அதை விக்கறாங்க. நம்மை பாதுக்காக்குறதுக்கு நம்மை சுற்றி சுவர் மட்டும் தான் இருக்கு... ஆனால் இவங்க பாதுகாப்புக்கு நண்பர்கள் இருக்காங்க.. அப்பா!..நாம எவ்வளவு ஏழைனு புரிய வைத்ததற்கு நன்றி அப்பானு சொன்னான். அவங்க அப்பா வாயடைச்சே போயிட்டார். அவருக்கும் இப்ப நிறைய விஷயங்கள் புரிஞ்சது.


இன்றைய செய்திகள்

22.02.2023


* 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டம்: மார்ச்.5, 6-ல் மதுரை மண்டலத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.


* ‘பிட்ஸ் ஏர்’ நிறுவனம் சார்பில் புதிய சலுகைகளுடன் கொழும்பு-சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது.


* தமிழக மீனவர்கள் 6 பேரை தாக்கிய இலங்கை நாட்டினர் மீது எடுங்கள்:மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்.


* கேபிள் துருப்பிடித்திருந்ததால் மோர்பி பாலம் அறுந்தது - விசாரணை குழு அறிக்கையில் தகவல்.


* உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கிய செயல், இந்தியா குறித்த உலகின் பார்வையை மாற்றிவிட்டது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


* துருக்கி - சிரிய எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் - இந்தியாவிலும் அதிர்வு.


* நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மக்கள் கிளர்ச்சியால் பதற்றம்.


* பெண்கள் டி 20 உலகக் கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி.


* முதல் டிவிசன் கால்பந்து போட்டி:எம்.ஆர்.சி. அணி சாதனை.


* அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 'சாம்பியன்'.


Today's Headlines


* 'Chief Minister in Field Survey' programme: Chief Minister Stalin's survey in Madurai region on 5th and 6th March.


 * Bits Air has launched a new flight service between Colombo and Chennai with new offers.


 * Take on the Sri Lankans who attacked 6 Tamil Nadu fishermen: Tamil Nadu Chief Minister's letter to the Union Minister of External Affairs.


 * Morbi Bridge collapses due to cable rusting - Information in inquiry committee report.


 * External Affairs Minister S. Jaishankar has said that the act of providing vaccine to the world has changed the world's view of India.


*  6.3-magnitude earthquake strikes again on Turkey-Syria border - Tremors also in India.


 * Demonetization in Nigeria: Tensions fueled by popular unrest.


 * Women's T20 World Cup: Indian team qualifies for semi-finals


 * First Division Football Tournament: MRC  Team record.


 * Argentina Open Tennis: Spain's Algarz 'Champion'

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers