Skip to main content

Zeal study official: பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2022

  Zeal study official:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2022


 மாண்டஸ் புயல் காரணமாக இன்று (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


⭕ தேனி ( பள்ளிகள் மட்டும் )


⭕திண்டுக்கல் : கொடைக்கானல , சிறுமலை பகுதி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *ராமநாதபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *சிவகங்கை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *திருப்பத்தூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *திருச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *தருமபுரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *நாகை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *நாமக்கல் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *சேலம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *கள்ளக்குறிச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *புதுக்கோட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *அரியலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *பெரம்பலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *ராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 


⭕ *புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


திருக்குறள் :


பால் :அறத்துப்பால். 




அதிகாரம் : விருந்தோம்பல். 




இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி


வேளாண்மை செய்தற் பொருட்டு.




விளக்கம்:


வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.




பழமொழி :


yourself first,others afterwards. 


தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 


2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்


பொன்மொழி :


நீங்கள் அடிவாங்கத் தயாராக இல்லை என்றால் உங்களால் அழகான சிலையாக மாறவும் முடியாது.


பொது அறிவு :


1.இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?


 டாக்டர் ராஜேந்திர பிரசாத். 


2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்? 


பண்டித ஜவஹர்லால் நேரு.


English words & meanings :


chord - musical tone. noun. இசை தந்தி, இசை குறிப்பு. பெயர்ச் சொல். cord - rope. noun.கயிறு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி, பி 6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.


NMMS Q


0 கெல்வின் வெப்பநிலை என்பது __ 




விடை: தனிச் சுழி




டிசம்பர் 09




ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்




ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.




1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்




நீதிக்கதை


குரங்கு அறிஞர்




அறிஞர் ஒருவர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுத நினைத்தார். அவர் அமைதியான இடத்திற்கு செல்லலாம் என்று அரக்கர்கள் இருக்கும் இடத்திற்கு, தெரியாமல் சென்றுவிட்டார். அறிஞரை பார்த்த ஒரு அரக்கன் யார் நீ? என்றான். 




நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடி வந்தேன்! என்றார். இங்கு வந்ததற்கு தண்டனை கொடுப்பேன் என்று சொல்லி அவரை குரங்காக மாற்றிவிட்டான் அரக்கன். 




அவர் அழுதுகொண்டே, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் குரங்குகளைப் போல் பழங்களைத் தின்றார். பின்பு அவர் நகரத்திற்கு சென்றார். அங்கு பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்த ஒரு கப்பலில் அவர் ஏறினார். அதிலிருந்தவர்கள் சத்தம்க்கூட போட்டனர். குரங்கை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினர். 




கப்பலின் தலைவன் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்! என்றார். 




அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் மிகவும் நன்றாக தகுந்த முறையில் எழுதி அனுப்புபவர்க்கு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் செய்தி அறிவிக்கப்பட்டது. 




அனைவரும் செய்தி எழுதினர், அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். எல்லாச் செய்திகளையும் அரசர் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்ததால், அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து வந்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர். 




ஆனால், அரசர் தீர்மானமாக குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு இல்லை. ஏதோ அரக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் அறிஞரை பழைய நிலைக்கு மாற்றினாள். 




அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றி விஸ்வாசத்தோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். 




நீதி :


அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்




இன்றைய செய்திகள்


09.12.22


* ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.




* தென்னங்கன்றுகள், பயறு விதைகள் விநியோகம் தொடக்கம்; கரும்புக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை: ஆணைகளை வழங்கினார் முதல்வர்  ஸ்டாலின்.




* வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் நகரும் வேகம் மணிக்கு 6 கி.மீட்டர் என்பதில் இருந்து 11 கி.மீட்டராக அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




* இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.




* விசாரணையை பார்க்கும் வகையில் மொபைல் செயலி 2.0 உச்ச நீதிமன்றத்தில் தொடக்கம்.




* அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கடற்படையினருக்கு ஐஎன்எஸ் சில்காவில் பயிற்சி .




* உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 2022-ம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கவுரவித்துள்ளது. அவருக்கு ‘உக்ரைனின் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.




* 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.




* டிவிசன் ஹாக்கி லீக்: தமிழ்நாடு தபால் துறை அணி அரைஇறுதிக்கு தகுதி.




* உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - 'பிபா' தலைவர் தகவல்.




Today's Headlines




TET results are published on the website.




 Distribution of coconut saplings and lentil seeds started;  Special incentive of Rs 195 for sugarcane: Chief Minister Stalin issued orders.




 According to the Chennai Meteorological Department, the moving speed of Cyclone Mantus in the Bay of Bengal has increased from 6 kmph to 11 kmph.




 For the first time in India, a post-graduate course in emergency medicine has been started in 23 government medical colleges.




 Mobile App 2.0 Launched in Supreme Court to Watch Trials




 Mariners who were selected under Agnipath Program are undergoing training at INS in Silka




 Zelenskyy, the President of Ukraine, has been honored by Times Magazine as the Person of the Year 2022.  He has been hailed as 'the inspiration of Ukraine'.




 BCCI today released the schedule of international matches to be held in India from January to March 2023.




 Divisional Hockey League: Tamil Nadu Postal Department qualifies for the semi-finals.




 200 crore people watched World Cup soccer match worldwide - 'FIBA' president informs.


 


 Prepared by




Covai women ICT_போதிமரம்




Comments

Follow us on Google News to Get Latest updates in Google search box

Popular posts from this blog

Zeal study Whatsapp groups links

CLiCK The below groups name to join the group Zeal study Class wise groups links  kindly join in any one groups in these groups class suitable messages will be shared  Join our Zeal study Official Telegram channel for all latest updates https://t.me/zealstudyofficial Follow our Whatsapp channel  https://whatsapp.com/channel/0029Va9B0NY5q08hCHKk8A19 for classes 1-5 materials Zeal study primary WhatsApp  groups links   Zeal study primary group 6 https://chat.whatsapp.com/JsUkig72NCbEfK0GtsoNg3 Zeal study primary group 1 https://chat.whatsapp.com/I5zmYprrqzh0hQHrRkqO6R Zeal study primary group 2 https://chat.whatsapp.com/Gs5xFU3kgzdIaQ8xExUrp4 Zeal study primary group 3 https://chat.whatsapp.com/KPoGHVgwlmkKCoUcX8J5yY Zeal study primary group 4 https://chat.whatsapp.com/KughukPr6yN4prnKWWNgB3 Zeal study primary group 5 https://chat.whatsapp.com/LYKowdSHZnT7vTM797PmLu For classes 6-8 Zeal study 6-8   WhatsApp  groups links For 6 ,7&8 handling...

Zeal Study Lesson Plan 6,7,8,9,10 Collection 2024-25 Learning Out Comes Based Lesson Plan

Zeal study lesson plan colllection   6,7,8,9.10 Tamil Lesson plan 6,7,8,9.10 English Lesson plan 6,7,8,9.10 Maths Lesson plan   6,7,8,9.10 Science Lesson plan 6,7,8,9.10 Social science Lesson plan Join our Whatsapp groups click here

PDF Answer keys for 9,8,7&6 th std all subjects Bridge course worksheets updated by Zeal study

6th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  7th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 8th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here  9th Standard Bridge  course  answer keys All subjects pdf download  click here 9th Tamil worksheet 1 answer key pdf download click here 9th Tamil worksheet 2 answer key pdf download click here 9th Tamil worksheet 3 answer key pdf download click here 9th Tamil worksheet 4 answer key pdf download click here 9th Tamil worksheet 5 answer key pdf download click here 9th Tamil worksheet 6 answer key pdf download click here 9th Tamil worksheet 7 answer key pdf download click here 9th Tamil worksheet 8 answer key pdf download click here 9 th Tamil worksheet 9 answer key pdf click here 9 th Tamil worksheet 10 answer key pdf click here 9 th Tamil worksheet 11 answer key pdf click here ...

Followers