உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு நூல் உண்டெனில் அது திருக்குறளாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் ஒன்றாக திருக்குறள் காணப்படுகிறது. இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையால் ஆனது. 1,330 குறள்களைக் கொண்டது.இந்நூலானது அறம், பொருள்,இன்பம் என மூன்று தொகுப்புக்களைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறி மற்றும் நெறிமுறைகள் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கு பெயர் பெற்றது.இத்தகு சிறப்புமிக்க திருக்குறளானது TNPSC தேர்விற்கான பாடப்பகுதியில் மிக மிக்கிய பங்கு வகிக்கிறது. சமச்சீர் கல்வி புத்தகத்திலுள்ள 6 முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள திருக்குறளானது இப்பதிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளாது. இப்பதிவானது தங்களுக்கு மிகவும் பயனுள்ளாதாக இருக்கும் . இப்பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் தங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic- TNPSC தேர்விற்காக 6 முதல் 10 -ம் வகுப்பு வரையுள்ள திருக்குறள் தொகுப்பு
File Type-PDF
Comments
Post a Comment